tamilkurinji logo
 

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Gorakhpur,Hospital,Tragedy,Live:,UP,Govt,Suspends,Principalnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

உ.பி. மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி

First Published : Saturday , 12th August 2017 07:20:38 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:20:38 PM


உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி (ஆகஸ்ட் 7) முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியானது தெரியவந்துள்ளது.

கடந்த இரு தினங்களில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்கு பிராண வாயு விநியோகித்துவந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியதன் காரணத்தாலேயே குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில், "கடந்த 7-ம் தேதி (ஆகஸ்ட் 7) முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியாகினர். ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். இவர்களில் 12 பேர் மூளைக் காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக இறந்தனர். எஞ்சியவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் மூச்சுத் திணறல் காரணமாக பலியாகினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டண்டன் ஆகியோர் கோரக்பூர் விரைந்துள்ளனர். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர். ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கோரக்பூர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து வந்துசெல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
உ.பி.  மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி,Gorakhpur Hospital Tragedy Live: UP Govt Suspends Principalnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.கேரளாவில் ‘நீலத் திமிங்கலம்’ விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ரஷியாவை சேர்ந்த உளவியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பில் உருவான ‘புளூவேல்’ (நீலத் திமிங்கலம்) எனப்படும் ஆன்லைன்

மேலும்...

 மருமகளை அடித்து கொடுமைபடுத்தியதால் மகனை கொலை செய்த தாய்
மும்பை மான்கூர்டு அம்பேத்கர் சாலில் வசித்து வருபவர் அன்வாரி(வயது45). இவரது மகன் நதீம் நைம்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அலகாபாத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் திருமணத்திற்கு பிறகு நதீம் நைம் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து

மேலும்...

 நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா
கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இரோம் சர்மிளா. இந்நிலையில்

மேலும்...

 காரில் தெலுங்கு நடிகைக்கு பாலியல் தொல்லைகொடுத்த நடிகர்-இயக்குனர்
கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்று சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தெலுங்கு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.இவரிடம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in