எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா

எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா
எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் ஃபைனல், நேற்று ஒளிபரப்பானது.

அகதா, சுசனா மற்றும் சீதாலட்சுமி மூவரும் இறுதிக்கட்ட போட்டியாளர்களாகக் களத்தில் நின்றனர். இந்த மூவரில் யாரை ஆர்யா தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதைக் காண அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

“இந்த மூன்று பேரில் நான் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், மற்ற இரண்டு பேரும், அவர்களின் குடும்பமும் வருத்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படாத பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

அதுவும் ஒரு மேடையில் இப்படிச் செய்ய எனக்கு மனதே வரவில்லை. கல்யாண மேடை போல இருக்கும் இங்கு, யாரையும் என்னால் வருத்தப்பட வைக்க முடியாது. நிச்சயம் என்னால் அதைச்செய்ய முடியாது.

எனக்கு இன்னும் நேரம் தேவை. கேமரா, மைக் இல்லாமல் இன்று முதல் தொடக்கமாக இருக்கட்டும். வேறு வேறு வழிகளில் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்று சொல்லி, யாரையுமே தேர்ந்தெடுக்காமல் நழுவி விட்டார் ஆர்யா.

ஆர்யாவின் இந்த முடிவை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ‘இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. ஆர்யா ஒருவரைத் திருமணம் செய்து கொள்வார் என்று நீங்கள் நினைத்திருந்தால், உங்களைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது’ என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
https://goo.gl/fooGSt


02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்