எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க

எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க
மிஸ்டுகால் கொடுத்து அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் ரகசியங்களை திருடி மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்களை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை தமிழக போலீசார் நாடி உள்ளனர். தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் வந்தபிறகு, ஆன்லைனில் தகவல் பரிமாற்றம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை செல்போனிலேயே பதிவுசெய்தல், செல்போன் மூலம் வங்கி கணக்கை கையாளுதல் என இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதற்கு தற்போது ஆபத்து வந்துவிட்டது.

மிஸ்டுகால் கொடுத்து, பின்னர் அந்த எண்ணுக்கு அழைப்பவர்கள் போனில் இருந்து தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த மோசடியில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஒருவரும் சிக்கினார். அவர் சவுதி அரேபியாவில் வேலை செய்தார். பின்னர், சென்னை வந்து திருமணம் செய்தார். புதுமண தம்பதியாய் பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்தனர். அந்தரங்க விஷயத்தைக்கூட செல்போனில் பதிவு செய்து சேமித்து வைத்தார். சில தினங்களில் அவருக்கு ஒரு எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்தது.

அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, பீப் சவுண்ட் மட்டுமே ஒலித்தது. அடுத்த வினாடியே அவரது செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்த வீடியோ காட்சி, ஆன் லைன் வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு நம்பர் அனைத்தும் மாயமானது. சில நாட்களில் மனைவியுடன் இருந்த அந்தரங்க காட்சிகள் இணைய தளத்தில் வலம் வந்தன. இதை கண்டு பதறிய அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அதில், பரபரப்பு தகவல்கள் வெளியாயின. இண்டர் நெட் போன் கால் மூலம் நைஜீரிய வாலிபர்கள் மிஸ்டு கால் கொடுத்து, அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொள்பவர்களின் செல்போனில் வைரஸை செலுத்தி அனைத்து ரகசிய தகவல் களையும் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நூதன மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்கள் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். ஆனால், இவர்கள் இந்த வகையான மோசடிகளை வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் மூலம் செய்வதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச போலீசாரின் உதவியுடன் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களம் இறங்கி உள்ளனர்.

மிஸ்டு கால் விடுக்கும் எண்ணை திரும்ப தொடர்பு கொள்ளும் போது வாடிக்கையாளர்களின் ஆன் லைன் வங்கிக் கணக்கு எண் ஒருவகையான சாப்ட்வேர் வைரஸ் மூலம் திருடப்படுகிறது. திருடப்படும் வங்கிக் கணக்கு எண் மூலம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்களின் பணம் மாற்றப்படுகிறது. சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணை நைஜீரியர்கள் லாக் செய்து அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
https://goo.gl/XTMbCY


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!