எதிர்கால இளைஞர்கள் அடிமைகளாக…… - Selvignairu

எதிர்கால இளைஞர்கள்  அடிமைகளாக…… - Selvignairu
கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்ற பழந்தமிழ்ப் பாடல் கூட பிச்சை எடுத்தாவது கற்க என்று சொல்லியுள்ளதே தவிர கடன் வாங்கியேனும் கற்க என்று சொல்லவில்லை

பிச்சை எடுப்பவன் திரும்ப செலுத்த வேண்டியதில்லை

ஆனால் கடன் வாங்கியவன் திரும்பக் கொடுத்தே ஆகணும்

இலவசமாக கல்வியைக் கொடுத்து  

படித்து வந்த இளைஞனுக்கு

வேலைவாய்ப்பை  தர வேண்டிய அரசாங்கம்

கடனாக பண உதவி செய்து   

தனியார் கல்லூரியில் படிக்கச்சொல்லி

மாணவப் பருவத்திலேயே கடனாளியாக்குகிறது

கடன் வாங்கிப் படிக்கும் மாணவனுக்கு வேலை வாய்ப்பில் உறுதி கொடுக்கிறதா அரசு? அதுவும் இல்லை

வேலைவாய்ப்பில் உத்திரவாதம் தராத அரசு

கடன் கொடுத்து

மாணவனை  கடனாளியாக்கி படிக்க ஊக்கப்படுத்துவது ஏன்?

இப்போது வங்கிகளில் கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள்

பான் கார்டு எனும் வருமானவரி அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வற்புறுத்துகிறது

இதில் என்ன தப்பு கடன் கொடுக்கும் வங்கி சொல்லும் ஆவணங்களை கொடுக்கத்தானே வேண்டும்

சரிதான் ஆனால் அங்குதான் மாணவனின் எதிர்காலம் முடக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது

பல வகைகளில் மக்களுக்கு நிதி உதவி  கொடுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கடனுதவி செய்யும் போது பான் எண்களை கேட்கின்றன   இந்த நிதி நிறுவனங்கள் இணைந்து ஒரு இணைய தளம் நடத்துகின்றன  அதில் உங்கள் பான் எண்ணை கொடுத்தால் அது உடனே  எந்தெந்த நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளீர்கள் சரியாக திருப்பி செலுத்தியிருக்கிரிர்களா குறை ஏதேனும் உள்ளதா  என்பதை காட்டிக்கொடுத்து விடும்

சரி இதற்கும் கல்விக் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிரிர்களா

இங்குதான் பிரச்சனையே

கல்விக் கடன் வாங்கிப்படிக்கும் அனைவரும் முழுப்படிப்பை முடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை

வீட்டு சூழ்நிலை காரணமாக

உடல் ஒத்துழைக்காத நிலை காரணமாக படிப்பை இடையில் நிறுத்த வேண்டியது காரணமாக

அடுத்தடுத்த ஆண்டுகளில் வங்கி எதிர்பார்க்கும் மதிப்பெண் எடுக்காத நிலையில்

 படித்து முடிக்கும்போது வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண் அல்லது திறமை இல்லாத நிலையில்

வேலையின்மையால் சம்பாதிக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில்  

சுயமாக ஒரு வியாபாரம் செய்யப்போகும்போது   

வியாபாரம் ஆரம்பிக்கவோ அல்லது வியாபார விருத்திக்காக வங்கி கடனை

நாடும்போது  

பான் எண்ணை கேட்பார்கள்  

அது கல்விக்கடன் வாங்கியவனை

செலுத்தாக் கடன் பட்டியலில்  காட்டும்

அப்போது கல்விக்கடன் வாங்கியவன் நிலை என்ன?

பெங்களுரு போன்ற ஐடி நகரங்களில் திறமையிருந்தும் வேலைக்காக தெருத்தெருவாக அலையும் இளைஞர்களையும்

எப்படியும் தொழிற்கல்வி முடித்துவிட்டால் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்து நிம்மதியாக வாழலாம் என்ற கனவுடன் கல்விக்கடன் வாங்கிப்படிக்க வங்கிகளில் படி ஏறி இறங்கும் மாணவர்களோடு  ஒப்பிட்டு பார்த்ததால் வந்த சிந்தனை இது

இன்றைய கல்விமுறை மறுபுறம் சுயமாக வாழக் கூடிய சிந்தனையை கொடுப்பதாகவும் இல்லை

எதிர்கால இந்திய இளைஞர்கள்  அடிமைகளாக

என்ன நடந்தாலும் கேட்க இயலாத கடனாளியாக இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறதா?

விடையாக யாரேனும் உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே

  milakaay@gmail.com       9488761307
https://goo.gl/mkmaFh


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!