என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்? "சுழல்" நாகராஜ்

என்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்?


 சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ் காந்தி  சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடாவில் பட்டப்பகலில் நான்கு வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கி  அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் ஆகியோரை தனியறையில் தள்ளி பூட்டிவிட்டு ரூ 18 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

 அதே போல்  சென்னை கிழ்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் இந்திய்ன் ஒவ்ர்சீஸ் வங்கி இயங்கி வந்தது. பாங்க் ஆப் பரோடா வங்கியில் நடந்தது போலவே இங்கும் நான்கு பேர் வந்து கொள்ளைடித்துச் சென்றனர். இங்கு ரூ 14 லட்சம், இந்த கொள்ளைச் சம்பவம் ஒரு பெரும் சவாலாக நம் காவலர்களுக்கு இருந்தது.

வாடிக்கையாளுர்களுக்கு மட்டும்மல்ல தமிழக மக்கள் அனைவருக்கும் இச்சம்பவம். ஒரு பெரும் மனக் குறையாகத்தான் இருந்தது.அதிலும் இந்த போலீஸ்காரர்கள் என்ன பாதுகாப்பு மக்களுக்கு தருகிறார்கள் என்று மக்கள் கோபக்கனலோடு பேசுவதை போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல இந்த அரசு கவனத்திற்கும் சென்றது.

இந்த மக்களின் கோபத்தை ஒரு சவலாக எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தே தீருவோம் என்று இரண்டு நாட்களில் குற்றவாளிகள் இருந்த இடத்தை தேடி சுற்றி வளைத்த போது குற்றவாளிகள் போலீஸ்சாரைப் பார்த்து சுட போலீசாரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு ஐந்து குற்றவாளிகளையும் விழ்த்தி  விட்டார்கள். இச் செயலை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்.

   என் கவுண்டர் சம்பவம் இவர்களுக்கு மட்டும்மல்ல ரோட்டில் நடந்து செல்லும் பெண்களின் தங்க செயினை பறிப்பவர்களுக்கும். தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடமும், வயதானவர்களிடமும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கொலை நடத்துபவர்களையும், ரவுடித்தனங்கள் பண்ணுகின்றவர்களையும், என்கவுண்டரில் சுட்டுத்தள்ளினால் இந்நாட்டில் பயமில்லாமல் வாழலாம் என பொது மக்கள் நினைக்கின்றனர்.

இப்படியிருக்க தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கொள்ளையடித்தவர்களுக்கு இந்த தண்டனையா! இவர்கள் தான் கொள்ளைகாரர்கள் என்பதற்கு என்ன  உத்திரவாதம் அப்படியானல் சட்டம் எதற்க்கு என்று வாதம் செய்கிறார்கள மனித உரிமை ஆர்வலர்கள்.

பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைக்  காப்பாற்றுவதுதான்  போலீசாரின் முதல் கடமை. அடுத்தகாக  போலீஸ்காரர்கள் தங்களை காப்பற்றிக்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. என்பது ஒரு போலீஸ் அதிகாரியின் ஆதங்கம்.

கொள்ளையர்களைப்பற்றி கவலைப்படும் மனித உரிமை ஆர்வலர்கள் யாரும்  அந்த பணத்தை இழந்த பொது மக்களைப்பற்றி கவலைப்படுவதாக  தெரியவில்லை, அப்படியானால் எங்கெங்கு கொள்ளை,  செயின் பறிப்பு, சம்பவங்கள் நடக்கிறதோ, அங்கு எல்லாம் இந்த மனித உரிமை அமைப்பாளர்கள் சென்று கொள்ளை போன பொருட்களின் மதிப்பு பணத்தையும் , இழந்த உயிரினையும் கொடுத்து விடுவார்களா?.ஏன்! இவர்கள் குற்றவாளிகளுக்கு துணை போகிறார்கள் என்று தெரியவில்லை.
https://goo.gl/VqTFeA


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!