என்னால் உலக கோப்பையை வெல்ல முடிய வில்லை அதை டோனி சாதிப்பார்- சவுரவ் கங்குலி நம்பிக்கை

என்னால் உலக கோப்பையை வெல்ல முடிய வில்லை அதை டோனி சாதிப்பார்- சவுரவ் கங்குலி நம்பிக்கை
கடந்த 2011–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்டதுடன், உலக மகுடத்தையும் சூடியது. இந்த உலக கோப்பையிலும் இந்திய அணி தனது முதல் 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து பிரமாதப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்றிருப்பதுடன், இந்த வகையில் இந்தியாவின் முந்தைய சாதனை (2003–ம் ஆண்டு உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றி) முறியடிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல் கேப்டன் என்ற முறையில் டோனியும் சில சிறப்புகளை வசப்படுத்தியுள்ளார். அதாவது மேற்கண்ட 9 வெற்றிகளும் டோனி தலைமையில் கிடைத்தவை ஆகும். உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்களின் வரிசையில் இந்தியாவின் சவுரவ் கங்குலியை (8 வெற்றி) பின்னுக்கு தள்ளிவிட்டு வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட்டை (இவரும் 9 வெற்றி) டோனி சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்ட ரிக்கிபாண்டிங் (தொடர்ந்து 24 வெற்றி) யாரும் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறார்.

உலக கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் விவரம் வருமாறு:–

ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) 24 வெற்றிகள்  (உலக கோப்பை 2003, 2007, 2011

டோனி (இந்தியா) 9 வெற்றிகள்  (உலக கோப்பை 2011, 2015)

கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்) 9 வெற்றிகள் ( உலக கோப்பை 1975, 1979)

சவுரவ் கங்குலி (இந்தியா) 8 வெற்றிகள்  2003

மார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து) 7 வெற்றிகள் ( உலக கோப்பை 1992)

டோனி தலைமையில், இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், சவுரவ் கங்குலி  தலைமையிலான இந்திய அணி பெற்ற  வெற்றிகள்  சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  கங்குலி கூறியதாவது:-

இந்திய அணி பிரமாதமாக விளையாடுகிறது. உலக கோப்பை வெற்றி பெறும் தூரத்தில் தான் உள்ளார்கள்.இந்திய அணியின் பவுலிங் பேட்டிங் பீல்டிங் மூன்றும் நான்றாக உள்ளது.

ஐசிசி தொடர்கள் போன்ற பெரிய போட்டித்தொடர்களின்போது டோனியின் கேப்டன்ஷிப் வியப்பை தருகிறது. பிற போட்டிகளில் இருந்ததைவிட முற்றிலுமாக டோனி அப்போது மாறிவிடுகிறார்.பிற போட்டிகளின்போது, டோனியின் கேப்டன்ஷிப் மிக சாதாரணமாகவே தென்படுகிறது. ஆனால் ஐசிசி தொடர்களில், அவர் விஸ்வரூபம் எடுப்பது மர்மமாகவே உள்ளது. டோணி மிகவும் கூல் கேப்டன் என்பதால்தான், வெற்றி சாத்தியம் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது மட்டுமே வெற்றிக்கான காரணம் கிடையாது.

டோனியும் பல நேரங்களில் கோபப்பட்டுள்ளார். ஆனால் கோபத்தை நெறிப்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் டோனியா, அல்லது நானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை சொல்வது கடினம். ஆனால், என்னால் உலக கோப்பையை வென்று தரமுடியவில்லை, அதை டோனி சாதிப்பார் என்பதை பெருமையுடன் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/VZpc3r


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்