tamilkurinji logo
 

என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger 8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil

Foods,That,Make,You,Look,Younger,,8,Foods,for,Beautiful,Skin,|,Skincare,Nutrition,Tips,endrum,ilamai,tips,in,tamil,Endrum,ilamayaga,irukka,,tamil,




என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger

First Published : Friday , 14th July 2017 01:55:42 PM
Last Updated : Friday , 14th July 2017 01:55:42 PM


என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil

கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்துக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆன்டி ஆக்சிடன்ட்களான லைகோபீன் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.



நெல்லிக்காய்   -  வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும். தேனில் ஊறவைத்த இஞ்சியை மென்று தின்பதால், செரிமானக் கோளாறு மற்றும் பல பிரச்னைகள் சரியாகும்.


குடைமிளகாய்:

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. குடை மிளகாய்கள் பல வண்ணங்களில் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகளும், பீட்டா கரோட்டீனும் அதிகம் உள்ளன.


சப்போட்டாப் பழம்   

சப்போட்டாப் பழம் சாப்பிட்டுவந்தால் இளமைக்கு கியாரன்டி. தினமும் இரண்டு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரக்கூடியது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு சப்போட்டா அருமையான மருந்தாகும். மேலும் இது இதயக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.



தக்காளி:


தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.


பழங்கள்


ஆப்பிள், மாதுளை, கேரட், சீத்தாப்பழம், மங்கூஸ், ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், சிவப்பு திராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பசலைக்கீரை, பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் தினமும் ஒரு கீரை உணவு, முருங்கைக்காய் போன்றவற்றை உண்பது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உண்பது நல்லது.


சோற்றுக்கற்றாழை  


சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே பெண்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு வரம். தினமும் காலை வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால், இளமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கச்செய்யும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு, அறுகம்புல் சாறு போன்றவையும் இளமை காக்கும் அற்புத மருந்துகளாகும்.



தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர் களுக்குப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள்கூட குறையும்


வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.


அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடலாம். காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்கும்போது, சுகமான காற்று முகத்தில் படும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.


பிறகு, அரை மணி நேரம் கழித்து சூடான ஆரோக்கிய பானம் எதையாவது பருகலாம். காலை வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். மதியம், இரவு உணவுகளையும் நேரந்தவறாமல் சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை, அளவோடு சாப்பிடுவது நல்லது.



இவை எல்லாவற்றையும்  பின்பற்றினால்  நீங்கள்   என்றும்   இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன்  இருக்க  முடியும்.


என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil
அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள்ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1

மேலும்...

 முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம்,

மேலும்...

 பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்
நம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து  நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று பிரண்டை.பிரண்டையின் மருத்துவ குணங்கள்.செரிமானக் கோளாறைப் போக்கும்.மலச்சிக்கலை நீக்கும்.குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு

மேலும்...

 நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்
நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி  பார்க்கலாம்.1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in