tamilkurinji logo
 

என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger 8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil

Foods,That,Make,You,Look,Younger,,8,Foods,for,Beautiful,Skin,|,Skincare,Nutrition,Tips,endrum,ilamai,tips,in,tamil,Endrum,ilamayaga,irukka,,tamil,


என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger

First Published : Friday , 14th July 2017 01:55:42 PM
Last Updated : Friday , 14th July 2017 01:55:42 PM


என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil

கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமைத் தோற்றத்துடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்துக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆன்டி ஆக்சிடன்ட்களான லைகோபீன் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.



நெல்லிக்காய்   -  வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும். தேனில் ஊறவைத்த இஞ்சியை மென்று தின்பதால், செரிமானக் கோளாறு மற்றும் பல பிரச்னைகள் சரியாகும்.


குடைமிளகாய்:

குடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது. குடை மிளகாய்கள் பல வண்ணங்களில் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகளும், பீட்டா கரோட்டீனும் அதிகம் உள்ளன.


சப்போட்டாப் பழம்   

சப்போட்டாப் பழம் சாப்பிட்டுவந்தால் இளமைக்கு கியாரன்டி. தினமும் இரண்டு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரக்கூடியது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு சப்போட்டா அருமையான மருந்தாகும். மேலும் இது இதயக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.



தக்காளி:


தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.


பழங்கள்


ஆப்பிள், மாதுளை, கேரட், சீத்தாப்பழம், மங்கூஸ், ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், சிவப்பு திராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பசலைக்கீரை, பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் தினமும் ஒரு கீரை உணவு, முருங்கைக்காய் போன்றவற்றை உண்பது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உண்பது நல்லது.


சோற்றுக்கற்றாழை  


சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே பெண்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு வரம். தினமும் காலை வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால், இளமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கச்செய்யும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு, அறுகம்புல் சாறு போன்றவையும் இளமை காக்கும் அற்புத மருந்துகளாகும்.



தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர் களுக்குப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள்கூட குறையும்


வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும்.


அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடலாம். காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்கும்போது, சுகமான காற்று முகத்தில் படும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.


பிறகு, அரை மணி நேரம் கழித்து சூடான ஆரோக்கிய பானம் எதையாவது பருகலாம். காலை வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். மதியம், இரவு உணவுகளையும் நேரந்தவறாமல் சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை, அளவோடு சாப்பிடுவது நல்லது.



இவை எல்லாவற்றையும்  பின்பற்றினால்  நீங்கள்   என்றும்   இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன்  இருக்க  முடியும்.


என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil என்றும் இளமையுடனும்   புத்துணர்ச்சியுடன் இருக்க  இயற்கை உணவு முறைகள் |Foods That Make You Look Younger,Foods That Make You Look Younger  8 Foods for Beautiful Skin | Skincare Nutrition Tips endrum ilamai tips in tamil Endrum,ilamayaga,irukka, tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்
உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை நீக்கும். மாதவிலக்கு வலியின்றி இருக்கும்.உங்கள் இடுப்பு பகுதி உறுதியாய் இருக்க உடற்பயிற்சி அவசியம்.30

மேலும்...

 குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer
குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்பூண்டு பூண்டுகுடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே,

மேலும்...

 தூதுவளை இலையின் மருத்துவ குணங்கள் | Thoothuvalai Benefits and Medicinal Uses
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புத மூலிகைகளில் இதுவும் ஒன்றுதூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததுதூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை  கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய்

மேலும்...

 பெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat
 அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in