tamilkurinji logo


 

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Save the Children sounds Yemen health alarm

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Save,the,Children,sounds,Yemen,health,alarm




செய்திகள் >>> உலகம்

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்

First Published : Thursday , 3rd August 2017 02:19:53 PM
Last Updated : Thursday , 3rd August 2017 02:19:53 PM


ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Save the Children sounds Yemen health alarm


அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன.

இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை.

எனவே, ஏராளமானோர் பட்டினியால் தவிக்கிறார்கள். சுகாதார சீர் கேட்டால் அவர்கள் வசிக்கும் பகுதியில் காலரா நோய் பரவியது. இதில், ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள். தொடர்ந்து காலரா நோய் பரவிய வண்ணம் உள்ளது.

ஆனால், மக்கள் பட்டினியால் வாடுவதால் அவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எனவே, காலரா உள்ளிட்ட எந்த நோய் தாக்கினாலும் அதை எதிர்த்து போராடும் அளவுக்கு அவர்களுடைய உடல்நிலை இல்லை.

இதில், குழந்தைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பட்டினி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழப்பை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச குழந்தைகள் அமைப்பான சேவ் த சில்ரன் சமூக அமைப்பு கூறி இருக்கிறது.

இவ்வாறு 2 லட்சம் குழந்தைகள் வரை உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

எனவே, சர்வதேச சமுதாயங்கள் ஏமன் நாட்டு குழந்தைகளை காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Save the Children sounds Yemen health alarm ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Save the Children sounds Yemen health alarm ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Save the Children sounds Yemen health alarm
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in