ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது

ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், பணம், தங்கம், வைரம் மற்றும் வைடூரியம் உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கை அளிக்கின்றனர். ஏழுமலையான் கோயில் உண்டி, ஆர்ஜித சேவா, தலைமுடி விற்பனை, தங்கும் அறைகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 40 ஆண்டுகளாக டெபாசிட் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் நன்கொடை வழங்கும் பணமும் வங்கியில் செலுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் டெபாசிட் தொகை இரண்டு மடங்காக உயர்ந்தது.தேவஸ்தானம் வங்கியில் செலுத்திய பணத்துக்கான வட்டியையும், வங்கியிலேயே செலுத்துவதால் முதலீட்டு தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உண்டியல் காணிக்கை மூலம் வரும் பணம், நகைகள் உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.

கடந்த 2002- 2003ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 629 கோடி வங்கி முதலீடு இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலம் வந்த வட்டி மற்றும் அதன் பிறகு செலுத்தப்பட்ட முதலீடு சேர்த்து, கடந்த 2012- 2013 ஆண்டு பட்ஜெட்டில் 4,674 கோடியாக உயர்ந்தது. தொடர்ந்து, வட்டி மற்றும் முதலீடு சேர்த்து இப்போது ஏழுமலையான் கோயில் வங்கி டெபாசிட் ரூ.5,207 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் மேலும் 100 கோடி முதலீடு செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏழுமலையான் கோயில் முக்கிய வருமானம் உண்டியல் மூலமாக வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு உண்டியல் வருமானம் 601 கோடியாக இருந்தது. இது, 2010 - 2011ம் ஆண்டில் ரூ.694 கோடியாகவும், 2011- 2012ம் ஆண்டு ஸி756 கோடியாகவும் உயர்ந்தது. இந்த ஆண்டு 850 கோடியை தாண்டி உள்ளது. தொடர்ந்து, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.

https://goo.gl/jXivFv






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு