ஐபிஎல் கிரிக்கெட்-மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட்-மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா
சர்ச்சைகளைக் கடந்து ஒரு வழியாக 7-வது ஐபிஎல் போட்டி தொடங்கி விட்டது.

அபுதாபியில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், கெளதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கம்பீர் மற்றும் காலிஸ் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். மலிங்கா வீசிய யார்க்கர் பந்தில் கம்பீர் டக் அவுட்டில் வெளியேறினார்.

பின்னர் மணிஷ் பாண்டே மற்றும் காலிஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். மணீஷ் பாண்டே 64 ரன்களும், காலிஸ் 72 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, 5 விக்கெட் இழப்பிற்கு, 163 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் மலிங்கா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹசியும், ஆதித்யா தாரேவும் களமிறங்கினர். ஹசி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடும், தாரேவும் நிதானமாக விளையாடினர். ராயுடு 48 ரன்களிலும், தாரே 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களே எடுத்தது. இதன்முலம் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் 4 நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். காலிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
https://goo.gl/KEiqqK






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்