ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது ஷிண்டே

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது  ஷிண்டே
பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமைத்தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருக்கிறது.

இந்தநிலையில், 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஏப்ரல் 9-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க முடியாது என்று, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அறிவித்தார்.

நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப்பேட்டி அளித்த அவர், இந்த தகவலை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேடு ஆகிய நாடுகளில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 15-ந் தேதிக்குள் முடிவடைந்துவிட்டால் போட்டிகளின் ஒரு பகுதியை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 2 லட்சத்துக்கும் அதிகமான மத்திய போலீஸ் உள்ளிட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாநிலங்களுக்கு பாதுகாப்பு படைகளை அனுப்பும் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று, உள்துறை மந்திரி ஷிண்டே அறிவித்து இருக்கிறார்.
https://goo.gl/4PD7qH


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்