ஐ.நா. சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

ஐ.நா. சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டம்
ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஐ.நா.சபை மாளிகையில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்த புகைப்படத்துடன், ஐ.நா.விற்கான இந்திய தூதர் சையத் அக்பரூதீன் இச்செய்தியை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.இந்த தொடக்க முயற்சிக்கு ஐ.நா. பொது சபை தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றி கூறிஉள்ள சையத் அக்பரூதீன், ”மகிழ்ச்சியான தீபாவளி! ஐ.நா. சபை முதல் முறையாக தீபாவளி கொண்டாடுகிறது.

ஐ.நா. சபை தலைவரின் முயற்சிக்கு நன்றி,” என்று மற்றொரு டுவிட் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

ஐ.நா. தலைமையக கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து அடங்கிய விளக்கு ஏற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். அக்டோபர் 31-ம் தேதி வரையில் இந்த அலங்காரத்தில் கட்டிடம் காட்சியளிக்கும்.

ஐ.நா. பொதுசபையில் "தீபாவளி முக்கியத்துவத்தை" ஒப்புக்கொள்ளும் விதமாக 2014-ம் ஆண்டு தீர்மாணம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஐ.நா.சபையில் முதல் முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டு உள்ளது.

அதிகமான ஐ.நா. உறுப்பு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என குறிப்பிட்டு, தீபாவளி நாளில் ஐ.நா. சபை கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என்று தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மற்றும் கூட்டம் நடைபெறாத நாளாக அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த ஜூனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் சிறப்பு மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளித்தது.


ஐ.நா.சபை கட்டிடத்தில் இந்தியர்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வாழ்த்து அடங்கிய காட்சியை பார்த்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

https://goo.gl/YgBTCa


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே