ஐ.பி.எல். ஏலம் யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல். ஏலம்  யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது டெல்லி டேர்டெவில்ஸ்
எட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். கழற்றி விடப்பட்ட வீரர்களும், புது வரவுகளும் இன்று ஏலத்திற்கு வந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐ.பி.எல். ஏலம் பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி முரளி விஜய்யை 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

யுவராஜ்சிங்கை 16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இவரை கடந்த முறை 14 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணி எடுத்திருந்தது. ஆனால், அவரது ஆட்டத்திறன் திருப்தி இல்லாததால் அவரை விடுவித்தது. தற்போது அவருக்கு அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் இலங்கை வீரர் மேத்யூசை 7.50 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது.
https://goo.gl/PKbA7A


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்