ஐ.பி.டி.எல்.-ல் விளையாட நடாலின் ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?

ஐ.பி.டி.எல்.-ல் விளையாட நடாலின் ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?
சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் போட்டியில் விளையாட ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுக்கு ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி தரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை போல டென்னிசிலும் சர்வதேச பிரீமியர் லீக் (ஐபிடிஎல்) போட்டிகளை நடத்த இந்தியாவின் மகேஷ் பூபதி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இத்தொடரை நடத்துவதற்காக அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. போட்டிகள் இந்தாண்டு நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பாங்காக், கோலாலம்பூர், மும்பை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வீரர்கள் ஏலம் மார்ச் 2ம் தேதி துபாயில் நடத்தப்படுகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படுவார்கள்.  ஆண்கள் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, உலகின் 2ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பெண்கள் பிரிவில் பல்கேரியாவின் விக்டோரியா அசரன்கா, நெதர்லாந்தின் கரோலின் வோஸ்னியாக்கி, போலந்தின் ரத்வன்ஸ்கா ஆகியோரும் விளையாடுகிறார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடாலும் ஐபிடிஎல்லில் விளையாட உள்ளார்.

இவருக்கு ஒருநாள் இரவுக்கு, அதாவது 2, 3 மணி நேரம் நடக்கும் ஒரு போட்டிக்கு ரூ.6.2 கோடி வரை சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள். 27 வயதாகும் நடால் 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். போட்டி விதிமுறைகள், அணிகள் விபரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
https://goo.gl/PdBgHm


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்