ஒருதலை காதலால் இளம்பெண் கொலை

ஒருதலை காதலால் இளம்பெண் கொலை
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜானகி (24). ஐதராபாத்தில் உள்ள டிமார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அங்கு தனியாக வாடகைக்கு வீடு பிடித்து தோழியுடன் தங்கி இருந்தார்.

ஜானகி பணிபுரிந்த அதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த ஆனந்த் என்ற ஊழியர் காதலித்தார். தனத காதலை அவர் ஜானகியிடம் தெரிவித்த போது ஏற்க மறுத்துவிட்டார்.


என்றாலும் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் ஜானகியை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள், இல்லையெனில் உன்னை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

இதுபற்றி ஜானகி தான் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் புகார் செய்தார். உடனே ஆனந்தை வேறு கிளைக்கு மாற்றிவிட்டனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேற்று முன்தினம் ஜானகி தங்கி இருந்த வீட்டுக்கு கத்தியுடன் வந்தார். அங்கு தோழி இல்லை. அவர் சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்று இருந்தார். ஜானகி மட்டும் தனியாக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்த ஆனந்த் ஜானகியுடன் தகராறு செய்து கத்தியால் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் ஜானகி கீழே சாய்ந்ததும் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கட்டிய பின்பு தப்பி ஓடிவிட்டார். ஜானகி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதற்கிடையே நேற்று ஊரில் இருந்து வீடு திரும்பிய தோழி ரூபா, வீடு வெளிப் புறமாக பூட்டப்பட்டு இருப்பதையும் உள்ளே ஜானகி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜானகியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார். டாக்டர்கள் அவரை பரி சோதித்து விட்டு இறந்து விட்டதாக அறிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடிய சைக்கோ வாலிபர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
https://goo.gl/XX2QNU


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்