ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த விராட்கோலி

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில்  மீண்டும் முதலிடம்  பிடித்த   விராட்கோலி
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தர வரிசையில் இந்திய வீரர் விராட்கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அணிகள் பிரிவில் ஆஸ்திரேலியா (117 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்தியா (113 புள்ளிகள்) 2–வது இடத்திலும் தொடருகின்றன.  ஆசிய சாம்பியன் இலங்கை 3–வது இடம் பெற்றது.

ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் உள்பட 3 ஆட்டங்களில் மொத்தம் 189 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணி வீரர் விராட்கோலி (881 புள்ளிகள்) 12 ரேட்டிங் புள்ளிகள் பெற்று பேட்டிங் தர வரிசையில், தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி கேப்டன் டிவில்லியர்சை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜனவரி மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு விராட்கோலி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க அணி வீரர் டிவில்லியர்ஸ் (872 புள்ளிகள்) 2–வது இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி (856 புள்ளிகள்) 3–வது இடமும், தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா (840 புள்ளிகள்) 4–வது இடமும், இலங்கை வீரர் சங்கக்கரா (833 புள்ளிகள்) 5–வது இடமும், இந்திய வீரர்கள் டோனி 6–வது இடமும், ஷிகர் தவான் 3 இடங்கள் முன்னேறி 8–வது இடமும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சு தர வரிசையில் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 4 இடங்கள் ஏற்றம் கண்டு 5–வது இடத்தையும், அஸ்வின் 7 இடங்கள் முன்னேற்றம் பெற்று 14–வது இடத்தையும், அமித் மிஸ்ரா 5 இடங்கள் முன்னேறி 36–வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்–ரவுண்டர் தர வரிசையில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 4–வது இடம் பெற்றுள்ளார். ஏப்ரல் 1–ந் தேதி வழங்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நம்பர் ஒன் ஒருநாள் போட்டிக்கான விருதை ஆஸ்திரேலியாவும், 2–வது பரிசை இந்தியாவும் பெறுவதில் மாறுதல் இருக்காது என்று தெரிகிறது.

https://goo.gl/FzRxzu


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்