ஒரே சிரிஞ்ச் மூலம் ஊசி போட்டதால் 46 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு

ஒரே சிரிஞ்ச் மூலம் ஊசி போட்டதால் 46 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு
உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது.

 கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற போலி டாக்டர், ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 3 அதிகாரிகளை உன்னா நகருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அக்குழுவினர், இன்னும் 2 நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போடுவது குற்றச்செயல் என்று இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியுள்ளார்.
https://goo.gl/iK9Bhx






19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை