tamilkurinji logo


 

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,What revival? Close to 50000 MSMEs shut shop in Tamil Nadu in past year

What,revival?,Close,to,50000,MSMEs,shut,shop,in,Tamil,Nadu,in,past,year




செய்திகள் >>> தமிழகம்

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு

First Published : Friday , 8th June 2018 08:25:48 PM
Last Updated : Friday , 8th June 2018 08:25:48 PM


கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,What revival? Close to 50000 MSMEs shut shop in Tamil Nadu in past year

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, மின் பொருட்கள், தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களும், பெரிய தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள் 40 சதவீதம் ஏற்றுமதி செய்கின்றன. கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.

இதில், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பெரும்பாலான உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதித்தது.


தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்ய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27,209 என்ற அளவில் இருந்தது.

அதன் மூலம் ரூ.2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.8,739.95 கோடி அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

உத்யோக் ஆதார் பதிவறிக்கை செயலாக்கத்திற்கு வந்த பிறகு, 2016-2017-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது.

முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.

2017-2018-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது.

இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது என அரசின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி அறிமுகம் தமிழகத்தில் பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் சத்தமில்லாமல் மூடப்பட்டு வருவதற்குக் காரணம் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும்தான் என்பது பலரது ஆதங்கம்.

 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மோடி அறிவித்தது பல தொழில் நிறுவனங்கள் பலத்த அடிவாங்க காரணமாக அமைந்தது.

அடுத்த ஆண்டே ஜிஎஸ்டியும் சிறு குறு தொழில் நிறுவனங்களை பதம் பார்த்து விட்டது என்கின்றனர் கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் தொழில் முனைவோர் சங்கத்தினர். சரிந்த முதலீடு அரசின் கொள்கை விளக்க குறிப்பின் படி மத்திய அரசு நடவடிக்கையால் 11,000 கோடி முதலீடு சரிந்துள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் 49,329 எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.



கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,What revival? Close to 50000 MSMEs shut shop in Tamil Nadu in past year கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,What revival? Close to 50000 MSMEs shut shop in Tamil Nadu in past year கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல் 5 லட்சம் பேர் வேலை இழப்பு,What revival? Close to 50000 MSMEs shut shop in Tamil Nadu in past year
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்
மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in