tamilkurinji logo


 

கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்

First Published : Monday , 22nd January 2018 08:00:06 PM
Last Updated : Monday , 22nd January 2018 08:00:06 PM


கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாத விவசாயியை அவர் வைத்திருந்த டிராக்டரால் ஏற்றி தனியார் நிதி நிறுவன ஏஜென்டுகள் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சீதாபூரைச் சேர்ந்தவர் கியான் சந்திரா(வயது45). இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் வாய்பேச இயலாதவர்.


கியான் சந்திராவுக்கு 2.5 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இந்த நிலத்தில் உழவுப் பணிக்காக டிராக்டர் வாங்கமுடிவு செய்தார். இதற்காக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ. 5லட்சம் கடனாக சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி இருந்தார்.

கியான் சந்திரா கடுமையாக தனது வயலில் உழைத்து ஏறக்குறைய ரூ.3.75 லட்சத்தை திருப்பிச் செலுத்திவிட்டார்.


இன்னும் கடனை அடைக்க ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டியது இருந்தது. அதிலும் ரூ. 35 ஆயிரம் பணத்தை சில வாரங்களுக்கு முன்புதான் செலுத்தி இருந்தார்.


மீதத் தொகையை திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டு இருந்தார். அதுவும் தாமதமானது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கியான் சந்திரா தனது வயலில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் நிறுவன ஏஜெண்டுகள் 5 பேர் கியான் சந்திராவிடம் கடன் தொகையை கேட்டனர். அவர் விரைவில் கடனை செலுத்திவிடுவதாக தனியார் நிதிநிறுவன ஏஜென்டுகளிடம் தெரிவித்தார். ஆனால், அந்த ஏஜென்டுகள் டிராக்டரின் சாவியை கொடுக்குமாறு கோரி, அவரிடம் தகராறு செய்தனர்.

ஆனால், டிராக்டரை எடுத்துச் சென்றால் விவசாயம் பாதிக்கும் என்று கியான்சந்திரா அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த, அந்த ஏஜென்டுகள் கியான் சந்திராவை கீழே தள்ளி டிராக்டரை எடுத்தனர்.

அப்போது டிராக்டரை தடுக்க முயன்ற சந்திராவை ஏஜென்டுகள் கீழே தள்ளி அவர் மீது டிராக்டரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.


இதில் சம்பவ இடத்திலேயே கியான் சந்திரா உயிரிழந்தார்.

இது குறித்து கியான் சந்திராவின் சகோதரர் ஓம் பிரகாஷ் கூறுகையில், " இந்த மாதம் 10ந்தேதி தான் ரூ.35 ஆயிரம் தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்து இருந்தோம்.

மீதத் தொகையை விரைவில் செலுத்திவிடுவதாக எனது சகோதரர் உறுதியளித்து இருந்தார்.

ஆனால், அவரின் வார்த்தைகளை நம்பாத நிதி நிறுவனத்தினர் அவர் வேலை செய்த நிலத்துக்கு வந்து டிராக்டரின் சாவியை பிடுங்கி டிராக்டரை எடுக்க முயன்றனர்.


அப்போது, டிராக்டரை தடுக்க எனது சகோதரர் முயன்றபோது, அவரை கீழே தள்ளி டிராக்டரை அவர் மீது ஏற்றினர். இதில் என் கண் முன்னே எனது சகோதரர் துடிதுடித்து இறந்தார்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சீதாபூர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர், ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 இது குறித்து சீதாபூர் போலீஸ் அதிகாரி எம்.பி. சிங் கூறுகையில் " தனியார் நிதி நிறுவன ஏஜென்டுகளுக்கும், விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


அப்போது ஏஜென்டுகள் டிராக்டரை எடுத்துச் சென்றபோது, அதைத் தடுக்க முயன்ற கியான் சந்திராவை ஏஜென்டுகளில் ஒருவர் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.


அப்போது, டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விரைவில் நிதி நிறுவன ஏஜென்டுகள் கைது செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கடனை கட்டாத விவசாயியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஏஜெண்ட்கள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி
கேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம்

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in