கடலில் தத்தளித்தவர்களை மனித சங்கிலி அமைத்து காப்பாற்றிய பெண்

கடலில் தத்தளித்தவர்களை மனித சங்கிலி அமைத்து காப்பாற்றிய  பெண்
அமெரிக்காவில் கடலில் தத்தளித்த 9 பேரை கடற்கரையில் இருந்த சுமார் 80 பேர் மனித சங்கிலி அமைத்து காப்பற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

ஃபுளோரிடாவின் பனாமா நகர கடற்கரை சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் பனாமா நகரவாசிகளும் அது பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது.

இதனால் பொதுமக்கள் அங்கு குவிந்த வண்ணம் இருப்பர்.இந்நிலையில் பனாமா கடலில் குளித்து கொண்டிருந்த ராபர்டோ உர்ஸ்ரே என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் திடீரென அலைகளில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற 3 நீச்சல் வீரர்களும் அலைகளால் இழுத்துச் செல்லப்பட 9 பேரும் கடலில் தத்தளிக்கத் தொடங்கினர்.

மேலும், அவர்களைச் சுற்றி சுறா ஒன்றும் வட்டமடிக்கத் தொடங்கியது. இதனால் பயந்த அவர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில் தத்தளிப்பதை முதலில் பார்த்த ஜெஸிகா மே சிம்மன்ஸ் என்பவர், தனது 8 மற்றும் 11 வயது மகன்களின் உதவியுடன் கடற்கரையில் இருந்த மற்றவர்களையும் உதவிக்கு அழைத்தனர்.

அதன்படி சிறிது நேரத்தில் ஜெஸிகா அங்கிருந்த சுமார் 80 பேரின் உதவியுடன் மனிதச் சங்கிலி அமைத்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக கரை சேர்த்தார். இந்த சம்பவம் அங்கிருத்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

https://goo.gl/8jhmdr


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே