tamilkurinji logo
 

கணவன்–மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

கணவன்–மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை

First Published : Thursday , 30th November 2017 07:16:48 PM
Last Updated : Thursday , 30th November 2017 07:16:48 PM


கணவன்–மனைவி இருவரும்  ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

  சென்னை திருமங்கலம் அருகே, கணவன்–மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கஷ்டப்படும் மகன்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை என எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

சென்னை திருமங்கலம் அருகில் உள்ள பாடிக்குப்பம், பாடி புதுநகர் 18–வது தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி(வயது 67). இவருடைய மனைவி கோதை(58). இவர்களுக்கு வினோத்(40), ராஜேஷ்(38) என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, குடும்பத்துடன் வினோத் முகப்பேர் பகுதியிலும், ராஜேஷ் அயப்பாக்கம் பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.

இதனால் குப்புசாமி–கோதை இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த வயதிலும் குப்புசாமி, திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மகன்கள் இருவரும் அடிக்கடி வந்து பெற்றோரை பார்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் குப்புசாமி வீடு திறக்கப்படவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் பலமுறை கதவை தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை. குப்புசாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது அங்குள்ள அறையில் குப்புசாமியும், அவருடைய மனைவி கோதையும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் ஒரே நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

இது குறித்து அவர்களின் மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இருவரும் குடும்பத்துடன் பதறி அடித்துக்கொண்டு வந்து பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், தற்கொலை செய்த கணவன்–மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள், தற்கொலை செய்து கொண்ட அறையில் சாமி புகைப்படத்துக்கு அருகே இருந்த நோட்டில், குப்புசாமி எழுதிய 3 பக்க உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் குப்புசாமி எழுதி இருந்ததாவது:–

எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதனால் என் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. 4 வருடம் முன்பு கீழே விழுந்த எனது மனைவிக்கு கால் ஒடிந்ததால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. எனக்கும் நோய் தொல்லை கடுமையாக உள்ளது.

எனது மகன்கள் இருவருக்கும் தொல்லை தரக்கூடாது என்பதற்காக நான் காவலாளி வேலைக்கு செல்கிறேன். பாவம் எனது மகன்களும் கஷ்டப்படுகிறார்கள். இந்தநிலையிலும் எங்களுக்கு அவர்கள் உதவி செய்கிறார்கள். இனியும் நாங்கள், அவர்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை. அவர்களும் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுகிறார்கள். ஆகவே நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டோம்.

நான் சிறுக, சிறுக சேமித்து இந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து உள்ளேன். அதை பெற்று எனது மகன்களிடம் கொடுக்கவும். என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ராஜசேகருக்கு தெரியும். நான் இந்த மாதம் 25 நாட்கள் வேலை செய்து உள்ளேன். அதற்கு சம்பளம் ரூ.7,500 வரும். அதை வினோத்திடம் கொடுக்கவும். நாங்கள் யாருக்கும் கஷ்டமாக இருக்க விரும்பவில்லை.

இவ்வாறு அதில் உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக ஜெ.ஜெ. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



கணவன்–மனைவி இருவரும்  ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கணவன்–மனைவி இருவரும்  ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கணவன்–மனைவி இருவரும்  ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை
உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடிதிருப்பூர்:திருப்பூர் மாவட்டம்

மேலும்...

 கன்னியாகுமரியில் வன்முறையை தூண்ட சதி செய்ததாக 7 மீனவர்கள் கைது
குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக பச்சை தமிழகம் அமைப்பாளர் சுப. உதயகுமார், 17 பாதிரியார்கள் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை உருவாக்க சதி செய்ததாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7

மேலும்...

 பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–சிக்பள்ளாப்பூர் மாவட்டம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in