tamilkurinji logo
 

கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

First Published : Wednesday , 29th November 2017 07:50:42 PM
Last Updated : Wednesday , 29th November 2017 07:50:42 PM


கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல; மனைவியை கணவன் தனது சொந்த உடைமை போன்று பயன்படுத்த முடியாது’ என்று ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்அசோகன். இவரது மகள் அகிலா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவம் படித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் முஸ்லிமாக மதம் மாறினார். ஹாதியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு ஷபின் ஜகான் என்பவரை திருமணம் செய்தார்.

இந்த திருமணத்தை எதிர்த்து பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக தன் மகள் மதம் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் சேரப் போவதாகவும் தெரிவித்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இத்திருமணம் செல்லாது என்று அறிவித்தது. ஹதியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.


உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த விசாரணையின்போது, ஹாதியாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கேரள போலீஸார் ஹாதியாவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு ஹாதியாவிடம் அரை மணி நேரம் தனியாக விசாரணை நடத்தியது. நீதிபதிகள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ஹாதியா மலையாளத்தில் பதிலளித்தார். அவரது பதில்களை கேரள மாநில அரசுக்கு ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் வி.கிரி மொழிபெயர்த்தார்.

ஹாதியாவின் விருப்பம் என்ன என்று நீதிபதிகள் கேட்டபோது, ‘நான் என் கணவருடன் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்’ என்று பதிலளித்தார்.

 வேறு மதத்தை பின்பற்றுவது, படிப்பை தொடருவது ஆகியவற்றில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு, ‘இந்த நாட்டின் நல்ல குடிமகள் என்ற முறையில் நான் விரும்பும் இஸ்லாம் மதத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

அதேநேரத்தில் படிப்பை தொடர்ந்து நல்ல மருத்துவராகவும் இருப்பேன். எனது படிப்புச் செலவுகளை கேரள அரசு மேற்கொள்ள விரும்பவில்லை. எனது கணவர் ஷபின் ஜகான் அந்த செலவுகளை ஏற்றுக் கொள்வார்’ என்றார்.


சேலம் கல்லூரியில் பாதுகாவலராக யார் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘எனது கணவரை பாதுகாவலராக நியமிக்க வேண்டும். வேறு யாரும் அந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை’ என்று பதிலளித்தார்.

 அப்போது நீதிபதி சந்திரசூட், ‘ஒரு மனைவிக்கு கணவன் பாதுகாவலராக இருக்க முடியாது. மனைவி என்பவர் கணவரின் உடைமை அல்ல. அவளுக்கென்று தனி அடையாளம், வாழ்க்கை மற்றும் சமூகம் உண்டு. என் மனைவிக்கு நான் பாதுகாவலனாக இருக்க முடியாது’ என்றார்.

இதையடுத்து ஹாதியா சேலத்தில் உள்ள சிவராஜ் மருத்துவக் கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவ படிப்பை தொடர உரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த கல்லூரியின் முதல்வர் ஹாதியாவின் பாதுகாவலராக இருப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் ஹாதியாவை கேரள போலீஸார் சேலத்திற்கு அழைத்துச் சென்றனர்.


கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கணவன் மனைவிக்கு பாதுகாவலன் அல்ல:ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஒரே பள்ளியில் வேலை காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக

மேலும்...

 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in