கணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்

கணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்
இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று கொண்டிருந்த கத்தார் விமானத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையினால் அவ்விமானம் சென்னை விமான நிலையத்தில்  நிறுத்தப்பட்டது.

ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் விமானத்தில் இந்தோனேசிய நகரமான பாலிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அவரது கணவரின் கைப்பேசியை எடுத்து சோதனை செய்திருக்கிறார். அதில் அவரது கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுகிறார்.

விமான ஊழியர்கள் எவ்வளவு முயற்சித்து கணவன் - மனைவி சண்டை முடிவுக்கு வரவில்லை. இதனையடுத்து அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு கணவன் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் அனைவரும்  இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் அப்பெண் சமாதானம் அடைந்த பிறகு வேறொரு விமனத்தில் அந்தக் குடும்பத்தினர் கோலாலம்பூர் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு நிலவியது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இது தொடர்பான எந்த தகவலையும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கூற மறுத்துவிட்டது.
https://goo.gl/qAkwb9






03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே