tamilkurinji logo


 

கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு,Mohammed Shami's wife accuses him of cheating, domestic abuse

Mohammed,Shami's,wife,accuses,him,of,cheating,,domestic,abuse
செய்திகள் >>> உலகம்

கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு

First Published : Wednesday , 7th March 2018 12:52:01 PM
Last Updated : Wednesday , 7th March 2018 12:52:01 PM


கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக  முகமது ஷமி மனைவி குற்றசாட்டு,Mohammed Shami's wife accuses him of cheating, domestic abuse

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஷமி பல பெண்களுடன் 'சாட்' செய்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ஹசின் ஜகான். முதலில் இதை பார்த்த பலரும் ஹசின் ஜகான் பேஸ்புக்கை யாரோ ஹேக் செய்து இதுபோல விஷம பிரச்சாரம் செய்திருக்க கூடும் என்றுதான் நினைத்தனர்.

ஆனால் ஹசின் ஜகான், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது உண்மை என குறிப்பிட்டு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் படங்கள் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட 27 வயது முகமது ஷமி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.

இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். அவ்வப்போது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் போடுவது ஷமி வழக்கம்.

முன்பு ஒருமுறை இவ்வாறு மனைவி படத்தை வெளியிட்டபோது, அவர் உடலை முழுக்க மூடும் வகையில் பர்தா அணியவில்லை என்ற விமர்சனங்களை, முஸ்லிம் நெட்டிசன்கள் முன்வைத்தனர்.

இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையும் ஆகியிருந்தது. அதிர்ச்சி சாட் இருப்பினும் மனைவிக்கு ஆதரவாகத்தான் ஷமி கருத்து கூறினார்.

எனவே இருவரும் அன்னியோனியமாக இருப்பதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் ஹசின் ஜகான் நேற்று தனது பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆபாச உரையாடல்கள் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பல பெண்களுடன் ஷமி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் ஷேர் செய்துள்ளார்.


அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்றும் தெரிவித்துள்ளார். பல சாட்கள் மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளதாகவும் காணப்படுகிறது. இந்த பேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்டுள்ளது.


டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹசின் ஜகான் இதுபற்றி கூறுகையில், ஷமியின் பிஎம்டபிள்யூ காருக்குள் அவருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி பரிசாக கொடுத்த செல்போன் கிடந்ததாகவும், அதை யதேர்ச்சையாக எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி, டார்ச்சர் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சட்ட நடவடிக்கை அதிகாலை 2 மணிவரை கூட சண்டை சச்சரவுகள் நீடித்துள்ளதாகவும், முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும், குண்டை தூக்கி போட்டுள்ளார் ஹசின் ஜகான்.

தனது மகளுக்காக பொறுமை காத்து வந்ததாகவும், ஆனால் ஷமியின் ஆபாச உரையாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க தேவையில்லை என முடிவுக்கு வந்துள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஷமி தற்போது, தியேதர் கோப்பை தொடரில் இந்திய ஏ அணிக்காக ஆடுவதற்காக தர்மசாலா சென்றுள்ளார்.கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக  முகமது ஷமி மனைவி குற்றசாட்டு,Mohammed Shami's wife accuses him of cheating, domestic abuse கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக  முகமது ஷமி மனைவி குற்றசாட்டு,Mohammed Shami's wife accuses him of cheating, domestic abuse கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக  முகமது ஷமி மனைவி குற்றசாட்டு,Mohammed Shami's wife accuses him of cheating, domestic abuse
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in