tamilkurinji logo
 

கன்னியாகுமரிக்கு தெற்கே 'ஒகி' புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

கன்னியாகுமரிக்கு தெற்கே 'ஒகி' புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

First Published : Thursday , 30th November 2017 06:21:18 PM
Last Updated : Thursday , 30th November 2017 06:21:18 PM


கன்னியாகுமரிக்கு தெற்கே 'ஒகி' புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன், "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு 'ஒகி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் தற்போது கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு சுமார் 65 கி.மீ., முதல் 75 கி.மீ., வரை பலத்த காற்று வீசும்.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெயும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.


கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறரார்கள்.

இந்தப் புயலானது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவுகளை நோக்கிப் பயணிக்கும்" என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் தக்கலையில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பெய்துள்ளது.


கன்னியாகுமரிக்கு தெற்கே 'ஒகி' புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கன்னியாகுமரிக்கு தெற்கே 'ஒகி' புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கன்னியாகுமரிக்கு தெற்கே 'ஒகி' புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in