கருவில் இருந்த குழந்தை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை

கருவில் இருந்த குழந்தை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை
 அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர்ப் மார்கரேட் ஹகின்ஸ். இவர் கருவுற்றிருந்தார்.


இந்த நிலையில் கருவுற்று 16 வாரங்கள் ஆன நிலையில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் அவரை சோதித்த போது மார்கரேட் வயிற்றில் இருந்த குழந்தைக்கு   கட்டி ஒன்று உருவாகி  குழந்தையின் ரத்த ஓட்டத்தை தடுத்து அதனால் குழந்தையின் இதயம் செயலிழக்கும் அபாயத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் 23வது வாரம் ஆகும் போது அந்த இதயம் முற்றிலுமாக செயலிழந்து விடும் என்றும் கண்டறிந்தனர். இதனால் குழந்தையை காப்பாற்ற ஒரு வித்தியாசமான  முடிவை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி மார்கரேட் கரு வளர்ந்து ஆறு மாதம் ஆகிய நிலையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் வெளியில் எடுத்தனர்.


பின்னர் அந்த பெண் குழந்தையின் முதுகில் இருந்த அந்த அபாய கட்டியை நீக்கினர், பின்னர் மறுபடியும் அந்த குழந்தையை தாயின் கருவில் வைத்து மருத்துவர்கள் மூடினார்கள்.

பிறகு 12 வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்த மார்கரேட் பிறகு அந்த பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தார்.

https://goo.gl/uxDXK9


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே