கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த இத்தாலி ராணுவ வீரர்கள்

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த இத்தாலி ராணுவ வீரர்கள்
இத்தாலியில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பணியிலிருந்த இரு ராணுவ வீரர்கள் பிரசவம் பார்த்தனர்.

இத்தாலியின் தலைநகரான ரோமில் அமைந்துள்ள ரோம் சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணியளவில் இரு ராணுவ வீரர்கள் பணியிலிருந்தனர். அப்போது பெண் ஒருவரது அழுகுரல் கேட்டது.

கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.


அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான வலி ஏற்பட, அதனைக் கண்ட ராணுவ வீரர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அந்தப் பெண் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

இது குறித்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஃப்ரான்ஸ்சிஸ்கோ மங்க் கூறும்போது, "நான் எப்படி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனக்குக் குழந்தைகள் கூட கிடையாது" என்று கூறினார்.

ராணுவ வீரர்களால் பிரசவம் பார்க்கப்பட்ட அந்தப் பெண் தனது குழந்தையுடன் இத்தாலியின் சிறந்த மருத்துவமனையான ஃபெட்மின் ஃப்ரடிலியில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
https://goo.gl/27FUa9


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே