கர்ப்பிணிப் பெண் துண்டுதுண்டாக வெட்டி கொலை

கர்ப்பிணிப் பெண்  துண்டுதுண்டாக வெட்டி கொலை
ஐதராபாத்தில் கர்ப்பிணிப் பெண்ணை பளிங்குக் கல் வெட்டும் எந்திரத்தில் துண்டாக துண்டாக வெட்டி கொலை செய்தவர்களை நீண்ட விசாரணைக்கு பின் வீடியோவில் கிடைத்த வழுக்கைத் தலை காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து ஐதராபாத் போலீஸ் ஆணையர் சந்தீப் ஷான்டில்யா கூறியதாவது:

பிஹார் மாநிலம், பங்கா மாவட்டம், மஹோனா மால்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பின்ஜீ(வயது32). இவருக்கும் உத்தரப்பிரதேசத்தின் சந்தவுசி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தினேஷ்க்கும், பின்ஜீவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பின்ஜீ தனது மகன் தேவ், மகள் நந்தினி ஆகியோரை தனது கணவர் திணேஷிடம் விட்டுவிட்டு இளைய மகனுடன் தனது சொந்த கிராமமான மஹோனா மால்டி கிராமத்துக்கு வந்துவிட்டார்.

இதையடுத்து, அங்கிருந்த விகேஷ் காஷ்யப்(வயது35) என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை பின்ஜீ திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பின்ஜீக்கு தெரியாமல், மம்தா ஜா என்பவருடன் விகேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்ஜீயை கழற்றிவிட்டு, விகேஷுடன் வாழ மம்தா ஜா திட்டம் போட்டார். அதற்காக பின்ஜீக்கு தெரியாமல், விகேஷை அழைத்துக் கொண்டு ஐதராபாத் வந்து சேர்ந்தார். மம்தா ஜாவின் மகன் அமர்காந்த் ஐதராபாத்தில் மதுபான பார் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்கள் மூன்று பேரும் ஐதராபாத் நகரில் உள்ள சித்தீக் நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதற்கிடையே மம்தா ஜாவின் கணவர் அணில் ஜாவும்(வயது75) இவர்களுடன் வந்து தங்கினார். ஒரே வீட்டில் 4 பேரும் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 45 நாட்கள் தேடலுக்கு பின், விகேஷின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, பின்ஜீ ஐதராபாத் வந்தார். உடன் தனது சிறு வயது மகனை மட்டும் அழைத்து வந்தார். இவர்கள் 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பின்ஜீ கர்ப்பமாக இருந்தார்

விகேஷுடன், பின்ஜீ சேர்ந்து இருப்பதை, மம்தா ஜா விரும்பவில்லை. விகேஷுடன் தான் சேர்ந்து வாழ்வதற்கு பின்ஜீ இடையூறாக இருப்பாள் என மம்தா கருதினார். மேலும், பின்ஜீ வேறு இருந்ததால், விகேஷுக்கு பணப்பிரச்சினையும் ஏற்பட்டது.

இதையடுத்து, தனது கணவர் அனில், மகன் அமர்காந்த் ஆகியோரின் உதவியுடன் பின்ஜீயை கொலை செய்ய மம்தா திட்டம் தீட்டினார்.

இதையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி திட்டமிட்டபடி, பின்ஜீயுடன் மம்தா வேண்டுமென்றே சண்டையிட்டார். அந்த சண்டையில், பின்ஜீயை வேகமாகத் தள்ளியதால், அவர் சுவற்றில் மோதி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து மம்தா, அவரின் கணவர் அனில், மகன் அமர்காந்த், மற்றும் விகேஷ் ஆகிய 4 பேரும் பின்ஜீயின் உடலை அப்புறப்படுத்த முடிவு செய்தனர். ஏறக்குறைய 27 மணிநேரத்துக்கு பின், மார்பிள் அறுக்கும் எந்திரத்தின் உதவியின் மூலம், பின்ஜீயின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். அந்த உடல்களை 2 பிளாஸ்டிக் பைகளில் போட்டு ஐதராபாத்தின் பூங்கா பகுதியில் 29-ம் தேதி அதிகாலையில் வீசிவிட்டு பைக்கில் 4 பேரும் வீடு திரும்பினர்.

இந்த கொலைக்கான காரணம், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 200 போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். நகரங்களில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில் பைக்கில் ஒரு பெண் உள்பட இரு நபர்கள் கையில் ஒரு பிளாஸ்டிக் பை வைத்து செல்லும் காட்சி உடலைக் கைப்பற்றிய பகுதிக்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. அவர்கள் அங்கிருந்து ராம்நகர் காலணிக்குள் செல்வதும் தெரிந்தது.

அதைத் தொடர்ந்து அந்த பைக்கின் உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்தோம்.

இதில் மம்தாவின் மகன் அமர்காந்த் பீஹாருக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பங்கா மாவட்டத்தில் அங்குள்ள போலீசாரின் உதவியுடன் கைது செய்தோம். இவர்களில் விகாஸ் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.

விகாஷ் தவிர மற்ற அனைவரும் சிக்கியதற்கு மம்தாவின் மகன் அமர்காந்த் வழுக்கை தலைதான் முக்கிய துருப்பாக இருந்தது.

பின்ஜீ உடல் அடங்கிய பிளாஸ்டிக் பைகள் போடப்பட்ட சித்திக் நகர், அஞ்ஜையா நகரில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளில் அனைத்திலும் ஹெல்மட் அணியாமல் ஒருநபர் நீல கலர் டி-சர்ட்டில் அதே பைக்கில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பைக்கில்தான் உடலைக் கொண்டு செல்ல பின்னர் பயன்படுத்தினர்.

இந்த இரு வீடியோக்களையும் ஆய்வு செய்த பின், அந்த பைக்கில் சென்றவரின் வழுக்கைத் தலையும், அமர்காந்தின் வழுக்கைத் தலையும் ஒரே மாதிரி இருந்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த கூட்டத்தினரையும் கைது செய்தோம். இவ்வாறு போலீஸ் அதிகாரி ஷாண்டில்யா தெரிவித்தார்.

https://goo.gl/nTa1BG


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை