கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - துரத்தி வந்து ஆய்வாளர் எட்டி உதைத்தார்: கணவர் ராஜா கதறல்

கர்ப்பிணி பெண் உயிரிழப்பு -  துரத்தி வந்து ஆய்வாளர் எட்டி உதைத்தார்: கணவர் ராஜா கதறல்

மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பதால் மெதுவாகத்தான் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தேன், என்னை அனுப்பிவிட்டு பின்னர் துரத்தி வந்து எட்டி உதைத்தார், பணம் கேட்டாலும் கொடுத்திருப்பேன் ஆனால் இப்படி கொன்றுவிட்டாரே" என்று கணவர் ராஜா கதறினார்.

மனைவியை இழந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் உஷாவின் கணவர் ராஜா கதறியபடி தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கூறும்போது, “எங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.

மனைவி நீண்ட நாட்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்திருந்தார், மூன்று மாதம் என்பதால் ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டோம்.

நேற்று உறவினர் வீட்டு நிச்சயதார்த்தம் என்பதால் மனைவியுடன் மாலையில் புறப்பட்டு திருவெறும்பூர் நோக்கி சென்றோம். மனைவி மூன்று மாத கர்ப்பிணி என்பதால் வாகனத்தை மெதுவாகத்தான் ஓட்டி வந்தேன்.

அப்போது வழியில் வாகன சோதனை என்று மடக்கினார்கள். நான் ஹெல்மட் போடவில்லை என்பதால் சாவியை எடுத்துக்கொண்டார்கள்.

பின்னர் மீண்டும் சாவியை கொடுத்ததால் போகச் சொல்லிவிட்டார்கள் என்று நினைத்து மனைவியுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் விடாமல் பல கிலோ மீட்டர் துரத்தி வந்துள்ளார் அந்த ஆய்வாளர்.

அப்படியே தவறு செய்திருந்தாலும் என்னை மடக்கி நிறுத்தி அபராதாம் போட்டிருந்தால்கூட கொடுத்திருப்பேனே, இப்படி அநியாயமாக எட்டி உதைக்கலாமா? எட்டி உதைத்து கீழே விழுந்ததில் என் மனைவி உயிரிழந்துவிட்டார், போன உயிரை அவர் திருப்பித் தருவாரா? நீண்ட நாளைக்கு பின் என் மனைவி கர்ப்பம் ஆனதால் பெரிய கனவோடு இருந்தோம் நொடிப்பொழுதில் அத்தனை கனவையும் கலைத்து விட்டாரே?

எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட அந்த ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்.” இவ்வாறு கதறி அழுதபடி கூறினார்.
https://goo.gl/oRMjKt


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்