கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்

கள்ளக்காதல் விபரீதம் சிறுவனுக்கு தூக்க மாத்திரைகளை  கொடுத்து கழுத்தை  நெரித்துக்கொன்ற தாய்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த சோழங்கபுரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி மீனா என்ற மீனாம்பாள்(40). இவர்களுக்கு அங்குராஜ்(13) என்ற மகன் உள்ளார். வீரமணி இறந்து விட்டதால் சாந்தாபுரம் பகுதியில் குடியிருந்து வந்தார்.

சாந்தாபுரம் அருகில் உள்ள சோமரசம்பேட்டை பள்ளியில் 9ம் வகுப்பில் அங்குராஜ் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அங்குராஜ் மயங்கி இருந்ததாக கூறி, மீனாவும், அவரது தோழி கனகராஜ் மனைவி லட்சுமி(39) என்பவரும் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்காததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறினர்.

மேலும் சாவில் மர்மம் இருப்பதாகக் கருதி, அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்குக்கு அனுப்பப்பட்டது. தகவல் அறிந்தததும் சோமரசம்பேட்டை போலீசார் சென்று மீனா, லட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.


மீனா, சாந்தபுரத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்தபோது முத்தழகு (எ) முத்தையன்(48), லட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

3 பேரும் வேலை முடிந்து அவ்வப்போது மீனா வீட்டுக்கு வந்து மதுஅருந்தி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இடையூறாக இருந்த அங்குராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு மீனாவும், லட்சுமியும் பாலில் அதிகமாக தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததில் அங்குராஜ் மயங்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி அடித்து கொலை செய்துள்ளனர்.


பின்னர் அங்குராஜ் திடீரென மயங்கிவிட்டதுபோல இரவோடு இரவாக 2 பேரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாடகமாடி உள்ளனர்.  அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டதால், ஜிஹெச்சுக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இறப்பில் சந்தேகம் இருந்ததால் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில் உண்மை அம்பலமானது. இவ்வாறு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை வழக்கு பதிந்து மீனா, லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

நேற்று மாலை இருவரையும் திருச்சி ஜேஎம் 5 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான முத்தையனை போலீசார் தேடி வருகின்றனர்.
https://goo.gl/SkaW2n






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி