கழுத்தறுத்து வாலிபர் கொடூர கொலை: கால்வாயில் சடலம் வீசிய கொடுமை

கழுத்தறுத்து வாலிபர் கொடூர கொலை: கால்வாயில் சடலம் வீசிய கொடுமை
திருவொற்றியூரில் கழுத்தறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் சடலம் வீசப்பட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை திருவொற்றியூர் ஜீவன்லால்நகர் அருகே அரசு பள்ளி பின்புறம் ரயில்வேக்கு சொந்தமான திறந்தவெளி மழைநீர்கால்வாய் உள்ளது.

இந்த பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக இறந்துகிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கால்வாய் அருகே கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் இறந்துகிடந்த இடத்தின் அருகில் ஒரு கத்தி மற்றும் மதுபான பாட்டில்கள் கிடந்தது. இதனால்  போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொலை செய்தார்களா, வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கால்வாயில் சடலம் வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://goo.gl/j6EPyB


01 Nov 2018

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

01 Nov 2018

உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்

31 Oct 2018

தாயை கொன்று குழந்தையையும் கொல்ல முயன்ற இளைஞர் கைது

31 Oct 2018

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்

25 Oct 2018

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

22 Oct 2018

சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி

22 Oct 2018

“ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல; வழக்கு தொடருவேன்”அமைச்சர் ஜெயக்குமார்

22 Oct 2018

சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்

16 Oct 2018

கத்தியால் குத்தப்பட்ட கணவர் மரணம்- மனைவி, காதலன் கைது

11 Oct 2018

மருத்துவ மாணவியை சுட்டுக்கொன்று போலீஸ்காரர் தற்கொலை