tamilkurinji logo


 

கழுத்தை அறுத்து முதியவர்களை படுகொலை செய்த வளர்ப்பு மகன் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

கழுத்தை அறுத்து முதியவர்களை படுகொலை செய்த வளர்ப்பு மகன் கைது

First Published : Monday , 8th January 2018 11:47:43 AM
Last Updated : Monday , 8th January 2018 11:47:43 AM


கழுத்தை அறுத்து முதியவர்களை  படுகொலை செய்த வளர்ப்பு மகன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சொத்து ஆவணங்களை கொடுக்க மறுத்த தாயையும், சித்தியையும் கழுத்தை அறுத்து கொலை செய்த வளர்ப்பு மகன் மற்றும் அவனது நண்பனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த திருவேற்காடு, மாதிராவேடு, மேட்டு தெருவில் வசித்து வந்தவர் ரங்கநாயகி  (85).
இவருக்கு, ஏழுமலை (51) என்ற மகனும், பாலகிருஷ்ணன் (45) என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.  பாலகிருஷ்ணன், தனது குடும்பத்துடன் தனியாக  அதே பகுதியில் வசிக்கிறார்.

ஏழுமலை, மனைவி மற்றும் குழந்தைகளுடன்   தாயுடன் அதே வீட்டில் வசிக்கிறார்.

 ரங்கநாயகியின் தங்கை கிருஷ்ணவேணி (75). இவரது வளர்ப்பு மகன் சரவணன்.  இந்த நிலையில்,  ஓசூரில் உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் ஏழுமலை,  மனைவி சமீனா மற்றும் குழந்தைகளுடன் ஓசூருக்கு  சென்று விட்டார்.

 வீட்டில் ரங்கநாயகி மட்டும் தனியாக இருந்ததால்  அதே பகுதியில் வசித்த  தங்கை கிருஷ்ணவேணியை  துணைக்காக  அழைத்து தங்க வைத்தார்.

நேற்று காலையில் இருவருக்கும் உணவு கொடுப்பதற்காக ரங்கநாயகியின் வீட்டுக்கு  சரவணன் வந்தார். வெகு நேரம் கதவை தட்டியும்  திறக்கப்படாததால் பின்பக்க  வாசல் வழியாக  சென்றார்.  

அங்கு ஹாலில் உள்ள சோபாவில்  தாய் கிருஷ்ணவேணி கழுத்து அறுக்கப்பட்டும்,  மற்றொரு அறையில் ரங்கநாயகி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில்  சடலமாக கிடந்ததை பார்த்து  அலறினார்.

தகவலறிந்து அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ், பூந்தமல்லி உதவி ஆணையர் ஆல்பிரட் வில்சன் மற்றும் போலீசார் வந்தனர்.

சடலமாக கிடந்த ரங்கநாயகி, கிருஷ்ணவேணி ஆகியோரின் கழுத்து மற்றும் காதில் அணிந்து இருந்த நகைகள் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

மேலும், தடயங்கள் ஏதும் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதையடுத்து,  போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கொலை நடந்த வீட்டிற்கு அவர்களது உறவினர்கள் பலரும் வந்த நிலையில், வீட்டின் அருகிலேயே வசித்து வந்த ரங்கநாயகியின் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் மட்டும் வரவில்லை.  மேலும், சொத்து பிரச்னை காரணமாக வழக்கு தொடர்ந்து இருப்பதும் தெரியவந்தது.

இதனால், பாலகிருஷ்ணன் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.  இதையடுத்து, அவரை போலீசார் தேடினார்.
அப்போது, அதே பகுதியில் உள்ள மதுக்கடையின் அருகே நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணனை போலீசார்  பிடித்து விசாரித்தனர்.

இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட ரங்கநாயகி பாலகிருஷ்ணைனை வளர்ப்பு மகனாக  வளர்த்து வந்தார்

மேலும், அவருக்கு திருமணம் செய்து வைத்து வீட்டிற்கு அருகிலேயே புதிதாக வீடும் கட்டி கொடுத்து உள்ளார். அவர் தனக்கு கொடுத்த நிலத்தை விற்று விட்டார்.  

அதன்பிறகு, ரங்கநாயகிக்கு சொந்தமான  சொத்தில் தனக்கும் சரி பங்கு உள்ளது. அதை ஏழுமலைக்கும், தனக்கும் சரி பங்காக பிரித்து தர வேண்டும் என்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும், பாலகிருஷ்ணன் பெயரில் ஒரு ஏக்கர் நிலத்தை அவரது தந்தை எழுதி வைத்து இருந்ததாகவும்,  அந்த ஆவணமும் ஏழுமலையிடம் உள்ளது.

அந்த ஆவணத்தை தீவிரமாக தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தாயும், சித்தியும் மட்டும் இருப்பதை உணர்ந்த பாலகிருஷ்ணன், குடிபோதையில்  தனது நண்பன் சுந்தரமூர்த்தியுடன் சென்று சொத்து ஆவணங்கள் வைத்து இருக்கும் அறையின் சாவியை கேட்டு தகராறு செய்துள்ளார்.

ஆனால் ரங்கநாயகி சாவியை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் ரங்கநாயகி, கிருஷ்ணவேணி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், சொத்து  ஆவணங்கள் உள்ள அறையின் கதவில் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார்.


 ஆனால் பூட்டை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டு விட்டு நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அணிந்து இருந்த நகைகளை பறித்துக் கொண்டு போலீசார் தன்னை பிடிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரையும் தூக்கி சென்று விட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.  இதையடுத்து,  பாலகிருஷ்ணன், அவரது  நண்பர் சுந்தரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

கழுத்தை அறுத்து முதியவர்களை  படுகொலை செய்த வளர்ப்பு மகன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கழுத்தை அறுத்து முதியவர்களை  படுகொலை செய்த வளர்ப்பு மகன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கழுத்தை அறுத்து முதியவர்களை  படுகொலை செய்த வளர்ப்பு மகன் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்
ஈரோடு அருகே அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார். ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் பாஷா - அஃப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முஹம்மது

மேலும்...

 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை
திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று மதியம் தொழில்

மேலும்...

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடையை நீடித்து அமலாக்கத்துறைக்கு பாட்டியாலா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in