காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த ஆபரண பெட்டகம் திறப்பு

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த ஆபரண பெட்டகம் திறப்பு
காஞ்சீபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டு காலமாக திறக்கப்படாமல் இருந்த ஆபரண பெட்டகம் திறக்கப்பட்டது. இதில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பழங்கால நகைகள் மீட்கப்பட்டன.

காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற ஆதி காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆபரணப் பெட்டகம் கடந்த 1981-ம் ஆண்டு முதல் திறக்கப்படவில்லை. இதற் கான சாவிகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் இதுநாள் வரை இந்த பெட்டகம் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த பெட்டகத்தை திறக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று சுமார் 5 மணி நேரம் போராடி இரும்பு ஆபரண பெட்டகத்தை உடைத்து திறந்தனர்.

தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால் உத்தரவின்பேரில், வேலூர் இணை ஆணையர் ராஜா மேற்பார்வையில், நகை சரிபார்ப்பு துணை ஆணையர் ஏ.வீரபத்திரன், உதவி ஆணையர் என்.தியாகராஜன், கோவில் நிர்வாக அதிகாரி விஜயன், ஆய்வாளர் எம்.சி.பார்வதி, பெரிய காஞ்சீபுரம் சப்-இன்ஸ்பெக்டர் டீக்காராம், கிராம நிர்வாக அதிகாரி சேகர், கோவில் அர்ச்சகர் கார்த்தி குருக்கள் ஆகியோர் முன்னிலையில் ஆபரண பெட்டகத்தில் இருந்த நகைகள் மீட்கப்பட்டன.

கல்வைத்த பெரிய திருமாங் கல்யம், தொங்கல் வெள்ளிக் கம்பி, வெள்ளிக்கல் வைத்த சந்திர பிறை, பெரிய பொட்டு, பலமாற்று தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், காளிகாம்பாள் மூலவர் வெள்ளி கிரீடம், வெள்ளி கற்பூரத்தட்டு, வெள்ளி விபூதி மடல், புல்லாக்கு, கர்ணபத்திரம் உள்பட தங்கம், வெள்ளி மற்றும் ஐம்பொன்னாலான பல அபூர்வ பழங்கால நகைகள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நகைகளை சரிபார்த்த பிறகு கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. முக்கிய நாட்களில் இந்த நகைகள் அம்பாளுக்கு அணிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

https://goo.gl/w9Ku8Z


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு