கானாவை வென்று புள்ளி கணக்கை தொடங்கியது அமெரிக்கா

கானாவை வென்று புள்ளி கணக்கை தொடங்கியது அமெரிக்கா
உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அமெரிக்கா அணி, கானா அணியை வீழ்த்தியது.

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இன்று நடந்த ‘ஜி’ பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, கானா அணிகள் மோதின.

சுறுசுறுப்பாக துவங்கிய முதல் பாதியின் முதல் நிமிடத்திலேயே அமெரிக்காவின் டெம்ப்சே, முதல் கோல் அடித்து மிரட்டினார். இதற்கு கானா அணி வீரர்களால் முதல் பாதியில் பதிலடி எதுவும் கொடுக்க முடியவில்லை.

இதனால் முதல் பாதியின்அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் கானா அணியின் ஆண்டிரு ஏய்யூ (82) ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

அசராமல் ஆடிய அமெரிக்க அணிக்கு புரூக்ஸ் (86) உடனடியாக பதிலடி கொடுத்தார். எவ்வளவு போராடியும் கானா அணி வீரர்களால் இதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில், அமெரிக்கா அணி, கானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
https://goo.gl/8Sc1CG


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்