காமன்வெல்த் போட்டி இந்தியாவிற்கு :2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள்

காமன்வெல்த் போட்டி  இந்தியாவிற்கு :2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள்
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன.இதில் போட்டிகள் நடந்த முதல் நாளில் நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.

பளூதூக்கும் போட்டி48 கிலோ :48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மீராபாய் சானு சைக்கோம் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்கள்.

பளூதூக்கும் போட்டி 56 கிலோ: ஆண்கள் பளூதூக்கும் போட்டி 56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி, வெண்கலம் வென்றார்.பளூதூக்கும் போட்டிகளில் மட்டும் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.

ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,2 வெண்கலம் பெற்று 4வது இடத்தில் உள்ளது.இங்கிலாந்து 6தங்க பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா,5 தங்கபதக்கங்களுடன் மொத்தம்15 பதக்கங்களூடன் இரண்டாவதாக உள்ளது.ஸ்காட்லாந்து 4 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.

https://goo.gl/NWpRKV


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்