tamilkurinji logo


 

காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு,Cell phone charger

Cell,phone,charger




காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு

First Published : Sunday , 29th April 2012 08:57:56 PM
Last Updated : Sunday , 29th April 2012 08:58:55 PM


காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு,Cell phone charger

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம்.  தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.  

இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 volt), தகடால் ஆன விசிறி, டையோடு (4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.

காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு,Cell phone charger காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு,Cell phone charger காற்றில் செல்போன் சார்ஜ் ஏற்றும் கருவி கண்டுபிடிப்பு,Cell phone charger
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரியை தயாரித்தார், அந்த

மேலும்...

 வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக

மேலும்...

 லேப்டாப்புகளின் பேட்டரியை பராமரிப்பதற்க்கான வழிமுறைக‌ள்
லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை பராமரிப்பதற்க்கான வழிமுறைகளை இங்கே காணலாம். 1. அதிக பேட்டரி பேக்கப்புக்கு..லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது

மேலும்...

 ஐ போன் 4 ( i-Phone 4)
இதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைத்தது. அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும்.இந்த போனின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in