tamilkurinji logo


 

காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி,Rajinikanth: Kaala will not face issues in Karnataka, people want to watch it tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Rajinikanth:,Kaala,will,not,face,issues,in,Karnataka,,people,want,to,watch,it,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி

First Published : Tuesday , 5th June 2018 07:07:06 PM
Last Updated : Tuesday , 5th June 2018 07:07:06 PM


காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி,Rajinikanth: Kaala will not face issues in Karnataka, people want to watch it tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் நிபந்தனை விதித்திருந்தார்.

இந்நிலையில், காலா படத்தை திரையிட்டால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால், காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காலாவை திரையிட்டால் அதற்கான விளைவுகளை தயரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி,Rajinikanth: Kaala will not face issues in Karnataka, people want to watch it tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி,Rajinikanth: Kaala will not face issues in Karnataka, people want to watch it tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி,Rajinikanth: Kaala will not face issues in Karnataka, people want to watch it tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in