கால் இறுதிக்கு முன்னேறினார் செரினா

கால் இறுதிக்கு முன்னேறினார் செரினா
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஸ்பெயினின் டேவிட் பெரர், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதினர். இதில் அபாரமாக ஆடிய பெரர் 6-3, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் பிரிவில் நடந்த மற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில் பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்கா, ஸ்பெயினின் டாமி ராபிரிடோ ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இத்தாலியின் ராபர்டா வின்சியை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய செரினா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் கஸ்னட்சோவா, ஜெர்மனியின் கெர்பர் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய கஸ்னட்சோவா, இரண்டாவது செட்டை 4-6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட ரஷ்ய வீராங்கனை, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். இறுதியில் கஸ்னட்சோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெதானி மட்டக்-சாண்ட்ஸ் ஜோடி, பிரான்சின் அலைஸ் கார்னட், ரஜானோ ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ஆஸ்திரேலியாவின் டெல்லாகுயா ஜோடி 4-6, 6-1, 9-11 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரோடியோனோவா, மெக்சிகோவின் கான்சலஸ் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

மற்றொரு கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் பார்டி ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் செர்மக், ஹராடெக்கா ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

 கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் காலினா வோஸ்கோபோவா, இத்தாலியின் டேனிலி பிராசியாலி ஜோடியை வீழ்த்தி, 2வது சுற்றுக்கு முன்னேறியது.
https://goo.gl/ukhH6S


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்