காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்,No politician can resolve the Cauvery issue: Prakash Raj ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்
First Published : Monday , 16th April 2018 12:05:02 PM Last Updated : Monday , 16th April 2018 12:05:02 PM
நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போராக நடந்து வருகிறது.
வறட்சி காலத்தில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் தண்ணீர் பிரச்சனை வரத்தொடங்குகிறது. இந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடிகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. பல்வேறு நாடுகள் தண்ணீர் பிரச்சினையை பேசி சுமூகமான தீர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன.
ஆனால், ஒரே தேசத்தில் இருக்கும் நம்மால் முடியவில்லை. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.
காவிரி பிரச்சனை ஏதோ நீராதாரப் பிரச்சனை மட்டுமல்ல, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.
இதில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரியை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஒரு நதிநீரைக் குடித்து விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதியில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்’ என கூறி உள்ளார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய
எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.
தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது