tamilkurinji logo
 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு,Masood Hussain appointed as Cauvery tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Masood,Hussain,appointed,as,Cauvery,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு

First Published : Wednesday , 6th June 2018 08:10:53 PM
Last Updated : Wednesday , 6th June 2018 08:10:53 PM


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு,Masood Hussain appointed as Cauvery tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய அரசு கடந்த 1-ம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல் வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்தது.

இந்த வாரம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்த தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.ய

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு,Masood Hussain appointed as Cauvery tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு,Masood Hussain appointed as Cauvery tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு,Masood Hussain appointed as Cauvery tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்

மேலும்...

 டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்

மேலும்...

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த

மேலும்...

 சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in