காவிரி மேலாண்மை வாரியம்- 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு

காவிரி மேலாண்மை வாரியம்- 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் 9-ம் தேதி இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அரசு பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்து 177 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கியுள்ளது.

மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 3 வார காலங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி பிரச்சனையில் மீண்டும் பேச்சுவார்த்தை கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. 25 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்த பயனும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்குப்பின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் இறுதி தீர்ப்பை வழங்கியது.
https://goo.gl/HFjEdh






18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்