tamilkurinji logo


 

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு,Rescue of boys trapped in Thai cave could take months, military warns tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Rescue,of,boys,trapped,in,Thai,cave,could,take,months,,military,warns,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> உலகம்

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

First Published : Tuesday , 3rd July 2018 11:30:24 AM
Last Updated : Tuesday , 3rd July 2018 11:30:24 AM


குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி  சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு,Rescue of boys trapped in Thai cave could take months, military warns tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து திரும்பவில்லை. வெள்ளம் காரணமாக அவர்கள் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து ராணுவம் தீவிரமாக களமிறங்கியது.

குகைக்குள் உடனடியாக செல்ல முடியாததால், குகையில் 25-க்கும் மேற்பட்ட பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது. பின்னர் குகையில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுமார் 1000 ராணுவ வீரர்களுடன், வெளிநாடுகளில் இருந்தும் நாடுகளில் இருந்து குகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

9 நாட்களுக்குப் பிறகு குகைக்குள் கால்பந்து குழுவினர் சிக்கியிருக்கும் பகுதியை நேற்று நெருங்கினர். அதன்பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நீர்மூழ்கி வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று மற்றொரு முனைக்கு கரையேறியபோது அங்கு கால்பந்து குழுவினர் இருந்தது தெரியவந்தது.

இருட்டாக இருந்ததால் டார்ச் லைட் அடித்து, அவர்களிடம் நீர்மூழ்கி வீரர்கள் பேசியுள்ளனர். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குகைக்குள் இருக்கும் நபர்களிடம் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று நீர்மூழ்கி வீரர்கள் கேட்க, 13 பேர் இருப்பதாக பதில் வருகிறது.  இதனால் மகிழ்ச்சி அடைந்த நீர்மூழ்கி வீரர்கள், நீங்கள் மிகவும் தைரியசாலிகள் என்று கூறி அவர்களை தேற்றுகின்றனர்.

மேலும், அனைவரும் நீந்திதான் செல்ல வேண்டும் என்பதால் முதலில் நாங்கள் இப்போது இங்கிருந்து செல்கிறோம். அதன்பின்னர் நாளை மேலும் பல வீரர்களுடன் வந்து உங்களை அழைத்துச் செல்கிறோம் என நீர்மூழ்கி வீரர்கள் கூறுகின்றனர். அப்போது தாங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக சிறுவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் நிலைமையை விளக்கிவிட்டு நீர்மூழ்கி வீரர்கள் அங்கிருந்து புறப்படுகின்றனர்.  

9 நாட்களுக்குப் பிறகு அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல், குகைக்கு வெளியே திரண்டிருந்த உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.




குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி  சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு,Rescue of boys trapped in Thai cave could take months, military warns tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி  சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு,Rescue of boys trapped in Thai cave could take months, military warns tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி  சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு,Rescue of boys trapped in Thai cave could take months, military warns tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது
முதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in