tamilkurinji logo
 

குஜராத் மாநிலங்களவை தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் தலைவர் வகேலா,Gujarat Rajya Sabha Election Live: Ahmed Patel On Sticky Wicket

Gujarat,Rajya,Sabha,Election,Live:,Ahmed,Patel,On,Sticky,Wicket


செய்திகள் >>> இந்தியா

குஜராத் மாநிலங்களவை தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் தலைவர் வகேலா

First Published : Tuesday , 8th August 2017 12:53:58 PM
Last Updated : Tuesday , 8th August 2017 01:00:49 PM


குஜராத் மாநிலங்களவை தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் தலைவர் வகேலா,Gujarat Rajya Sabha Election Live: Ahmed Patel On Sticky Wicket

 
குஜராத்தில் இன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா, பாஜகவுக்கு வாக்களித்தார்.

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் கட்சித் தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

இதனிடையே, குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகினார். அவரது ஆதரவாளர்களான 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் பல்வந்த் சிங் ராஜ்புத், பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டுள்ளார். 3 இடங்களுக்கு 4 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைத்திருந்தது கட்சி மேலிடம். இன்று தேர்தல் நடைபெற உள்ளதால், அவர்கள் அனைவரும் நேற்று காலை பெங்களூருவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 182 எம்எல்ஏக்களில் 57 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் 6 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் பலம் 51 ஆக குறைந்தது. இதன்படி ஒரு எம்பியின் வெற்றிக்கு 45 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.

பாஜகவுக்கு 121 எம்எல்ஏக்கள் இருப்பதால் 2 பேர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 3-வது வேட்பாளருக்கு 31 வாக்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 51 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 44 பேர் படேலுக்கு ஆதரவு அளிப்பார்கள். வெற்றிக்கு மேலும் ஒரு வாக்கு தேவை என்ற நிலையில், பெங்களூருவுக்கு செல்ல மறுத்த 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் (வகேலா ஆதரவாளர்கள்) சிலர் படேலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

இதுதவிர, காங்கிரஸ் வேட்பாளர் படேலுக்கு ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் (2) கூறியுள்ளது. எனவே படேல் வெற்றி பெறுவது உறுதி என்றும் ஒரு உறுப்பினரைக் கொண்ட குஜராத் பரிவர்தன் கட்சி பாஜகவுக்கு ஆதரவளிக்கும் எனவும் கூறப்படுகிறது.

காலை 8 மணியளவில் 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும், நிஜானந்த் ரிசார்ட்டில் இருந்து சொகுசு பேருந்து மூலம் வாக்கெடுப்பு நடைபெறும் காந்தி நகருக்கு அழைத்து வரப்படும் என்று கூறப்பட்டது. சரியாக 9 மணிக்கு எம்.பி.க்களுக்கான தேர்தல் தொடங்கியது.

ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சோட்டுபாய் வாசவா காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் வாக்களிக்க வந்தார். சிறிது நேரத்திலேயே பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.

காங்கிரஸ் கட்சி இரு கூறாகப் பிளந்து நிற்கிறது. கந்தேல் ஜடேஜா பாஜகவின் பக்கம் உள்ளார். ஜெயந்த் பாஸ்கி காங்கிரஸுக்கே திரும்பியுள்ளார்.

காலை 10.05 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா, பாஜகவுக்கு வாக்களித்தார். சில நிமிடத்துளிகளிலேயே அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வாக்களிக்க வந்தனர்.

காங்கிரஸாருடன் வந்த ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சோட்டுபாய் வாசவா பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு எம்.பி. சீட்டுக்காக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


குஜராத் மாநிலங்களவை தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் தலைவர் வகேலா,Gujarat Rajya Sabha Election Live: Ahmed Patel On Sticky Wicket குஜராத் மாநிலங்களவை தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் தலைவர் வகேலா,Gujarat Rajya Sabha Election Live: Ahmed Patel On Sticky Wicket குஜராத் மாநிலங்களவை தேர்தல்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் தலைவர் வகேலா,Gujarat Rajya Sabha Election Live: Ahmed Patel On Sticky Wicket
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி
 குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர்

மேலும்...

 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து

மேலும்...

 ஒரு கால் இல்லாவிடினும் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுவேன்:டோனியின் உத்வேகத்தை நினைவுகூர்ந்த எம்.எஸ்.கே. பிரசாத்
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.எஸ்.கே. பிரசாத், கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டிய நிலையில் காயமடைந்து நடக்கக் கூட முடியாத

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in