குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.

தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய இந்த தேர்வை ஏறத்தாழ 9 லட்சம் பேர் எழுதினார்கள். எழுத்துத்தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி வெளியானது.

தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனவரி 3, 4-ந் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மாவட்ட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. அதன்படி, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேற்று கவுன்சிலிங் தொடங்கியது. அதில் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கவுன்சிலிங்கை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தொடங்கி வைத்து சிறப்பிடம் பெற்ற தேர்வர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

கவுன்சிலிங் வந்திருந்தவர்கள் மத்தியில் அவர் பேசும்போது, வருவாய் துறையில் மிக முக்கியமான பணி வி.ஏ.ஓ. பணி ஆகும். அதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள நீங்கள் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அனைத்து தேர்வர்களுக்கும் சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை புத்தகம் ஒன்றையும் அவர் வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு நட்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1,870 வி.ஏ.ஓ. காலி பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 9 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். அவர்களில் இருந்து 736 பெண்கள் உள்பட 1,870 தேர்வாகி உள்ளனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்டத்தை தேர்வு செய்ய கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தற்போது மாவட்ட ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி உள்ளோம். சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பணிநியமன ஆணை பின்னர் வழங்கப்படும்.

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. போன்ற பதவிகளுக்காக நடத்தப்பட்ட குரூப்-1 மெயின் தேர்வு முடிவும், அதேபோல், குரூப்-2 தேர்வு முடிவும் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வி.ஏ.ஓ. பணிக்கான ஒதுக்கீட்டு ஆணை பெற்ற அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  

https://goo.gl/y8y2hb






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்