குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011 அன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு 20.6.2012 முதல் 27.7.2012 வரை நேர்முகத்தேர்வு நடந்தது. நேர்காணல் அல்லாத பதவிகளுக்காக 3,171 பேர்களை தேர்வுசெய்யும் பொருட்டு 22.11.2012 முதல் 1.12.2012 முதல்கட்ட கவுன்சிலிங் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் 2,541 விண்ணப்பதாரர்கள் மட்டுமே வெவ்வேறு பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நிரப்பப்படாமல் காலியாக உள்ள 630 பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் வகையில் 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு அனுமதிக்கப்பட்ட 623 பேரின் பதிவு எண் அடங்கிய பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கவுன்சிலிங் நடைபெறும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கவுன்சிலிங் அழைப்புக்கடிதத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளுமாறு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கிற்கு வரத்தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன்பிறகு கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.  

https://goo.gl/7sYM1G






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்