குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி

குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 13) கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூலை 17 கடைசி.

நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் (தலைமைச் செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 13-ம் தேதி வெளியிட்டது. தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

இணையதளத்தில் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த ஜூலை 17 கடைசி நாளாகும். நிரந்தரப் பதிவு எண்ணைப் பெற்றவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக கடைசி தினத்துக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை (ஜூலை 12) ஒரே நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காக இணையதளம் வழியே இதுவரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்போரைக் காட்டிலும் இருமடங்கு ஆர்வம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் காணப்படுகிறது. தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட மூன்று நாள்களுக்குள் இதுவரை 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி. செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
https://goo.gl/Y6wSi4


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்