tamilkurinji logo


 

குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு,




செய்திகள் >>> உலகம்

குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

First Published : Thursday , 18th May 2017 08:33:44 PM
Last Updated : Thursday , 18th May 2017 08:33:44 PM


குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு,

குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ் . இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், வேவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது. இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ் தானுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், இரு நாடுகளும் தங்களுடைய வாதத்தை சர்வதேச கோர்ட்டில் முன் வைத்தன.

இந்தியா வாதிடுகையில், “வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, “வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச கோர்ட்டை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது” என்று வாதிட்டது. இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வியன்னா ஒப்பந்தப்படி இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் உள்ளது. சர்வதேச நீதிமன்றம் தலையிட கூடாது என்ற பாகிஸ்தான் வாதத்தை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்தது.

பாகிஸ்தான் சட்டத்தின்படி குல்பூஷண் ஜாதவ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 40 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம், ஆனால் இதுவரையில் அவரது தரப்பில் முறையீடு செய்யப்பட்டதா என்பது தெரியவரவில்லை. குல்பூஷண் ஜாதவின் தயாரின் முறையீடு மற்றும் மனுவானது பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என இந்தியா தெரிவித்து உள்ளது.

வியன்னா ஒப்பந்தப்படி இந்தியா குல்பூஷண் ஜாதவ்வை சந்திக்க தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவ் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்து உள்ளன. வியன்னா மாநாட்டின் கீழ் இந்தியாவால் பெறப்பட்ட உரிமைகள் ஏற்கத்தக்கவை. இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட உத்தரவு வரும் வரையில் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.


குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு, குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு, குல்பூஷண் சிங் ஜாதவ் மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற

மேலும்...

 சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது
முதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே

மேலும்...

 காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்
பாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது டிரைவர் காரை 

மேலும்...

 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 17 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காத்மாண்டு திருபுவன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. வங்கதேச தலைநகரில் இருந்து வந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in