tamilkurinji logo


 

குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்,tamil news india news

tamil,news,india,news,




செய்திகள் >>> உலகம்

குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்

First Published : Monday , 22nd May 2017 05:01:55 PM
Last Updated : Monday , 22nd May 2017 06:46:52 PM


குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை   பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்,tamil news india news


பிறந்த குழந்தைகளுக்கு முதல்1 வருடத்திற்குள் பழச்சாறுகளை கொடுக்க கூடாது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2001-க்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ள பிறந்த குழந்தைகளுக்கான உணவு முறை குறித்த பட்டியலில் இந்த புதிய கட்டுப்பாடு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பு வரை பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை பழச்சாறு கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறந்த குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழங்களை அப்படியே சாப்பிடுவதில் இருக்கும் நண்மை, அதனை சாறாக பிழிந்து குடிப்பதில் கிடைப்பதில்லை என்று மருத்துவர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிறந்த குழந்தைக்கு முதல் ஓராண்டில் தாய்ப்பாலில் கிடைக்கக் கூடிய புரதச்சத்து உள்ளிட்ட சத்து வேறு எந்த வகையான உணவு வகைகளிலும் கிடைப்பதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்கப்படும் போது வளர்ந்த பிறகு அவர்களுக்கு பற்சிதைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஒரு வயது முதல் 12 வயது வரை அதிக அளவு பழங்களை குழந்தைகளை உண்ண வேண்டும். அப்போது கூட பழங்களை கடித்து உண்பதே சிறந்தது என்றும் அமெரிக்க மருத்துவர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை   பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்,tamil news india news குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை   பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்,tamil news india news குழந்தைகளுக்கு முதல் 1 வயது வரை   பழச்சாறு கொடுக்ககூடாது - ஆய்வில் தகவல்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in