குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

சளி இருமல் நோயக்கான காரணங்கள்:
பெரும்பலான இருமல் சளி நோய்க்கான காரணம் வைரஸ் கிரமிகளாகும். சில நேரங்களில் பாக்டீரியா கிருமிகளால் சுவாச மண்டல நோய் ஏற்படலாம்.
சாதாரண சளி இருமல் அல்லது தீவிரமான சளி இருமல் நோய் எவ்வாறு கண்டுபிடிப்பது.
சாதாரண சளி இருமல் நோய் உள்ள குழந்தை நன்றாக பால் குடிக்கும் .மூச்சுவிடும் வேகம் சாதராணமாக இருக்கும். ஜீரம் மிதமாக இருக்கும். தீவிர நோய்க்கொண்ட குழந்தை வேகமாக மூச்சுவிடும் .பால் குடிக்கத்திணறும். ஜீரமும் அதிகமாக இரக்கும்.
நிமோனியா காய்ச்சல் என்பது என்ன?
நிமோனியா காய்ச்சல் என்பது நுரையிரல் பாக்டீரியாவால் தாக்கப்பட்டு நுரையிரல் சரியாக வேலை செய்யாமல் நுரையிலில் சளி கட்டிக்கொள்ளும். இதனால் உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்காமல் போய்விடும். இதனால் உடல் நீலம் பூர்த்து க்காணப்படும். மூச்சின் வேகம் அதிகரித்து மார்பு தூக்கிப் போடும். குழந்தை பால் குடிக்க திணறும். ஜீரம் அதிகமாக காணப்படும். பெரிய குழந்தைகள் மார்பில் உள்ள சளியை . வெளியே கொண்டு வர இருமும்.
இதை ஆரம்ப நிலைலேயே கண்டுபிடித்து சரியான மருந்துகளைக் கொடுத்தால் இந்த நோயின் மூலம் ஏற்படும் இறப்பைத் தவிர்க்க முடியம்.
இருமல் சளி கொண்ட குழந்தைக்கு விட்டில் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்?
மூக்கு சளி அடைத்தால் சுத்தமான துணி கொண்டு மூக்கைச்சுத்தம் செய்ய வேண்டும். பாலை சிறது சிறிதாகக் கொடுத்தால் குழந்தை இருமி வாந்தி எடுக்காது.
விட்டில் செய்யக்கூடிய துளசிச்சாறு தேன் சுக்கு நீர் முதலியவற்றை அளவோடு கொடுக்கலாம். குழந்தைக்கு ஜீரம் இருந்தால் பாரஸிட்டமால் மருந்தை கொடுக்கலாம்.
எப்போழுது மருத்துவ ஆலோசனை தேவை?
குழந்தை வேகமாக மூச்சுவிடுதல் ,மூச்சுத்திணறல் ,குழந்தை சோர்ந்து இருத்தல், இருமல் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் இருத்தல் முதலியவை உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
டான்ஸில் என்றால் என்ன?
தொண்டைக்குழியின் இருபக்கங்களில் டான்ஸில் என்ற திசு இருக்கிறது. இது சில நேரங்களில் நுண்கிருமிகளால் தாக்கப்பட்டு வீங்கிவிடும் . இதனால் குழந்தைக்கு தொண்டைவலி கரகரப்பு ஏற்படும் .உமிழ்நீர் விழுங்குவதற்குக் குழந்தை கஷடப்படும்.
சுத்தமான நீரில் உப்புக்கலந்து தொண்டை கொப்பளிப்பதன் மூலம் வலிநீங்கும் மருத்தவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
காதில் சீழ் ஏற்படக்காரணம் என்ன?
தொண்டை காது மூக்கு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன். படுத்துக்கொண்டு பால் கொடுப்பதன் மூலம், குழந்தைகளுக்கு தலைக்கு நீர் ஊற்றுவதன் மூலம், காது பாதிக்கபட்டு காதில் சீழ்வடியலாம் ..இப்படிப்பாதிப்பு ஏற்படும்போது காதில் சீழ்வடியலாம். அல்லது காது வலியால் குழந்தை அழலாம்.
இந்த நோயை ஆரம்பத்திலேயே மருந்து கொடுத்து சரி செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இது மூளையைத் தாக்கக்சுடிய அபாயம் உண்டாகும்.
சளி இருமல் வாரமல் தடுப்பது எப்படி?
1.குழந்தைக்குத் தாய்ப்பால் 112 வயது வரை கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு திறன் உண்டு
2. குழந்தைக்கு அடிக்கடி தலையில் நீர் ஊற்றுவது காது,. மூக்கு போன்ற துவாரங்களில் எண்ணெய் ஊற்றுவது, வாயில் கைவிட்டு சளி எடுப்பது ,போன்ற தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தை இருக்குமிடத்தில் புகைப்பிடிக்ககூடாது. கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
4 இருமல் சளிநோய் உள்ள பெரியவர்கள் சுகாதாரமுறைகளை க் கடைபிடிக்கவேண்டும்.
இருமல் சளி நோய்கொண்டவர்கள் குழந்தைகளுடன் கொஞ்சக்கூடாது.
காற்றோட்டம் இல்லாத ஜனசெருக்கடி உள்ள அறைகளில் இருப்பதன் மூலமும் இருமல் சளி நோய் வருவதற்கும் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.
Related :
குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments
குழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி ...
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்
குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் ...
குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்
குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித ...
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய ...
குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் ...
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்
குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை ...
டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்
வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ...
குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
உங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை. குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படி?தினசரி குழந்தையை குளிப்பாட்டலாம் குழந்தையை குளிக்க வைக்க முடியாத ...
குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?
முதல்வருடம் சராசரியாக ஒரு குழந்தை ஐந்து முறை சளி இருமல் நோயால் பாதிக்கப்படும். முதல் இரண்டு மாதங்கள் சளி நோயால் பாதிக்கப்பட்டால். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்சளி ...
குழந்தையின் வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு ...